Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மாநகரின் ஒரு பகுதியில் நாளை குடிநீர் வராது

Print PDF

தினமணி 26.12.2009

மாநகரின் ஒரு பகுதியில் நாளை குடிநீர் வராது

திருச்சி, டிச. 25: பொன்மலைக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்துள்ளார்.

திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பொன்மலைக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான பிரதான உந்து குழாய்களில் கல்லுக்குழி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குச் செல்லும் பம்பிங் இடமாற்றம் செய்து ஜி கார்னர் அருகே புதிய உந்து குழாயுடன் இணைப்புக் கொடுக்கும் பணி நடைபெறவுள்ளது.

இதனால், அரியமங்கலம், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி, மத்தியச் சிறை, சுப்பிரமணியபுரம், விமான நிலையப் பகுதி, செம்பட்டு, கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான்நகர், அன்புநகர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. திங்கள்கிழமை வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

 

காவிரி, ஆத்தூர் குடிநீரை சமமாக பகிர்ந்தளிக்க முடிவு

Print PDF

தினமலர் 24.12.2009

.காவிரி, ஆத்தூர் குடிநீரை சமமாக பகிர்ந்தளிக்க முடிவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் காவிரி, ஆத்தூர் குடிநீரை சமமாக பகிர்ந்தளிக்க வசதியாக பகிர்மான குழாய்களில் மாற்றம் செய்யப்பட உள் ளது. திண்டுக்கல் நகராட்சிக்கு ஆத்தூர் குடிநீர் திட்டத்தில் இருந்தும், காவிரி குடிநீர் திட்டத்தில் இருந்தும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. காவிரி நீரில் சுவை குறைவாக இருப்பதாகவும், ஆத்தூர் நீர் சுவை மிகுந்ததாக உள்ளதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் நகரில் சில பகுதிகளுக்கு மட்டும் ஆத்தூர் குடிநீரும், பல பகுதிகளுக்கு காவிரி குடிநீரும் சப்ளையாகிறது. இதனால் அனைத்து பகுதி மக்களும் தங்களுக்கும் ஆத்தூர் குடிநீர் தேவை. காவிரி குடிநீர் தேவையில்லை என மனு கொடுத்து வருகின்றனர். இந்த பிரச்னையை சரி செய்ய அனைத்து பகுதிகளுக்கும் ஆத்தூர், காவிரி நீரை மாறி, மாறி சப்ளை செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக குடிநீர் வடிகால் வாரியத்துடன் கலந்து ஆலோசனை செய்து, பகிர்மான குழாய்களிலும் வால்வுகளிலும் மாற்றம் செய்ய முடிவு செய்துள் ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் போது நகர் முழுவதும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளையாகும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 24 December 2009 09:45
 

ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர்

Print PDF

தினமணி 23.12.2009

ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர்

சிவகாசி, டிச. 22: சிவகாசி நகராட்சியில் பரீச்சார்த்தமாக ஒரு பகுதியில் மட்டும் டிசம்பர் 28-ம் தேதி முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.அசோகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

சிவகாசி நகராட்சியில் தற்போது 7 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. இதின் கொள்ளளவு 38 லட்சம் லிட்டர் ஆகும். வெம்பக்கோட்டை ஆணைப் பகுதியிலிருந்து 2005-2006-ம் ஆண்டு தினசரி 30 முதல் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்தது.

2007-ம் ஆண்டு மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர், அத் திட்டத்தின் கீழ் தினசரி 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கப் பெற்றது. தற்போது இத் திட்டத்தின் கீழ் மட்டும் தினசரி 40 முதல் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பரீச்சார்த்தமாக எம்.ஜி.ஆர். திடலில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் பகுதிக்கு, டிசம்பர் 28-ம் தேதி முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

இதன் மூலம் நகராட்சிப் பகுதியில் ஆறு ஏரியாவிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆறு நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதுள்ள ஆறு ஏரியாவை, நான்கு ஏரியாவாகப் பிரித்துள்ளோம் என்றார்.

சாமிபுரம் காலனி, முருகன் காலனி, சோலை காலனி ஆகியவை ஒரு ஏரியாகாவும், பார்த்தசந்திரன் லேவுட், புதுத்தெரு, புஷ்பா காலனி ஆகிவை ஒரு ஏரியாகவும், சுப் பிரமணியபுரம் காலனி ஒரு ஏரியாகவும், பாரதி நகர் ஒரு ஏரியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் ஏரியாவில் 230 குடிநீர் இணைப்புகளும், இரண்டாவது ஏரியாவில் 579 இணைப்புகளும், மூன்றாவது ஏரியாவில் 350 இணைப்புகளும், நான்காவது ஏரியாவில் 280 இணைப்புகளும் உள்ளன என்றார் அவர்.

இந்த பகுதியில் ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகிப்படும். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்புத் தர கேட்குக் கொண்டார். மேலும் படிப்படியாக நகராட்சி முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியின் போது நகர்மன்றத் தலைவர் ராதிகாதேவி, ஆணையாளர் விஜயராகவன், பொறியாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 319 of 390