Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமணி                31.07.2013 

இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கடலூர் நகராட்சிப் பகுதியில் புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 இதுகுறித்து நகராட்சி ஆணையர் பா.காளிமுத்து கூறியது: கடலூர் நகருக்கு சப்ளை செய்யும் போர்வெல்கள் கேப்பர் மலை, திருவந்திபுரம் மலையடிவாரத்தில் உள்ளன. கேப்பர் மலையில் உள்ள துணைமின்நிலையத்தில் 30-ம் தேதி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதனால் குடிநீர் மோட்டார் இயக்க முடியாத நிலை உள்ளது.

 இதன்காரணமாக 31-ம் தேதி கடலூர் நகரில் குடிநீர் விநியோகம் இருக்காது. ஆகஸ்ட் 1-ம் தேதி வழக்கம்போல் குடிநீர் விநியோகம் வழங்கப்படும்.   

 

அடையாறு, தரமணியில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி                31.07.2013 

அடையாறு, தரமணியில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் குழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தரமணி, திருவான்மியூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.1) காலை 7 மணி முதல் சனிக்கிழமை (ஆக.3) காலை 7 மணி வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இருந்து பள்ளிப்பட்டு வரை குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே வியாழக்கிழமை காலை 7 மணி முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை தரமணி, திருவான்மியூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படலாம். லாரி மூலம் குடிநீர் பெற 81449 30913, 044 - 24416341 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

மாநகராட்சி 39வது வார்டில் குடிநீர் பற்றாக்குறை போக்க கூடுதல் ஆழ் துளை கிணறு

Print PDF
தினகரன்        19.07.2013

மாநகராட்சி 39வது வார்டில் குடிநீர் பற்றாக்குறை போக்க கூடுதல் ஆழ் துளை கிணறு


வேலூர்: வேலூர் மாநகராட்சி 39வது வார்டில் உள்ள சிவராஜ் நகர், கொளத்து மேடு, ஆகிய பகுதிகளில் நேற்று எம்எல்ஏ விஜய் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதையடுத்து கொளத்து மேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை போக்க கூடுதலாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் இயங்கி வரும் சின்டெக்ஸ் பொருத்தப்பட்ட ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்தார். அப்போது சரியாக இயங்காத ஆழ்துளை கிணறுகளை மாற்றி புதிதாக அமைத்து தருவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 3வது மண்டல குழு தலைவர் குமார், கவுன்சிலர் அஞ்சனா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 33 of 390