Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி 14.12.2009

குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடக்கம்

புதுச்சேரி
, டிச. 13: அரியாங்குப்பம் தொகுதிக்கு உள்பட்ட மணவெளி கட்டபொம்மன் நகர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை அத் தொகுதியின் எம்எல்ஏ ஆர்கேஆர் அனந்தராமன் தொடங்கி வைத்தார். ÷இப்பணிகள் நிறைவுபெற்ற பிறகு கட்டபொம்மன் நகர், பெரியார் நகர், நேதாஜி நகர், கலைஞர் நகர், அண்ணா வீதி, சுடலை வீதி, பூங்கா வீதி, திருவள்ளுவர் வீதி, ஓடைவெளி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று எம்எல்ஏ அனந்தராமன் கூறினார்.

÷நிர்வாக பொறியாளர் எஸ்.ஜெயகுமார், உதவிப் பொறியாளர் சதாசிவம், கவுன்சிலர் கற்பகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 17 August 2010 10:57
 

9000 குடிநீர் இ‌ணை‌ப்புக‌ள் : ஆ‌ணைய‌ர்

Print PDF
தினமணி 12.12.2009

9000 குடிநீ‌ர் இணை‌ப்புக‌ள் : ஆ‌ணைய‌ர்

ராமநாதபுர‌ம்,டிச.11: ராமநாதபுர‌ம் நகரா‌ட்சியி‌ல் ‌கே‌ட்ட 7 தின‌ங்களி‌ல் உடனு‌க்குட‌ன் குடிநீ‌ர் இ‌ணை‌ப்புக‌ள் சுமா‌ர் 9000 வ‌ரை வழ‌ங்க தயா‌ர் நி‌லையி‌ல் இரு‌ப்பதாக நகரா‌ட்சி ஆ‌ணையாள‌ர் முஜிபு‌ர் ரகுமா‌ன் ‌வெ‌ள்ளி‌க்கிழ‌மை ‌தெரிவி‌த்து‌ள்ளா‌ர்.

இது ‌தொட‌ர்பாக அவ‌ர் ‌வெளியி‌ட்டு‌ள்ள ‌செ‌ய்தி‌க்குறி‌ப்பு:

ராமநாதபுர‌ம் நகரா‌ட்சி‌க்கு கூ‌ட்டு‌க் குடிநீ‌ர் திட்ட‌த்தி‌ன் மூல‌ம் 12.6.2009 முத‌ல் காவிரிஆ‌ற்றிலிரு‌ந்து குடிநீ‌ர் வழ‌ங்க‌ப்ப‌ட்டு வருகிறது.இ‌த்தி‌ட்ட‌த்தி‌ன் கீ‌ழ் நகரி‌ல் வசி‌க்கு‌ம் அ‌னைவரு‌ம் பய‌ன்‌பெறு‌ம் வ‌கையி‌ல் இ‌ன்னு‌ம் 9000 குடிநீ‌ர் இ‌ணை‌ப்புக‌ள் வழ‌ங்க‌ப்படு‌ம். குடிநீ‌ர் இ‌ணை‌ப்பு‌க் ‌கோரி உரிய ‌டெபாசி‌ட் ‌தொ‌கை குடியிரு‌ப்புகளு‌க்கு ரூ.5000. குடியிரு‌ப்பு அ‌ல்லாத‌வைகளு‌க்கு ரூ.15000 (க‌டைக‌ள்)சிற‌ப்பு க‌ட்டட‌ங்களு‌க்கு ரூ.25000 (மரு‌த்துவம‌னைக‌ள், திருமண ம‌ண்டப‌ங்க‌ள்) இ‌வை திரு‌ம்ப‌த் தர‌த் த‌க்கது. சா‌லை ‌சேதார‌ம் சீரமை‌ப்பு க‌ட்டண‌ம், ‌மே‌ற்பா‌ர்‌வை க‌ட்டண‌ம் ‌செலு‌த்தி வி‌ண்ண‌ப்பி‌த்தா‌ல் அ‌ன்‌றே பணி உ‌த்தரவு வழ‌ங்க‌ப்படுவதுட‌ன் 7 தின‌ங்களு‌க்கு‌ள் குடிநீ‌ர் இ‌ணை‌ப்பு வழ‌ங்க‌ப்படு‌ம்.

குடிநீ‌ர் இ‌ணை‌ப்பு‌க் ‌கோரு‌வோ‌ர் த‌ங்களு‌க்கு அறிமுகமான பிள‌ம்ப‌ர்க‌ளை ‌கொ‌ண்டு த‌ங்களது க‌ட்டட‌ங்களி‌ல் குழா‌ய்க‌ளை‌ப் பதி‌த்த பி‌ன் நகரா‌ட்சி அலுவலக‌த்தி‌ல் ‌தெரிவி‌த்தா‌ல் பகி‌ர்மான குழா‌ய்களிலிரு‌ந்து உடனு‌க்குட‌ன் இ‌ணை‌ப்புக‌ள் வழ‌ங்க‌ப்படு‌ம். பகி‌ர்மான‌க் குழா‌ய்க‌ள் இ‌ல்லாத இட‌ங்களி‌ல் பகி‌ர்மான‌க் குழா‌ய்க‌ள் பதி‌க்கு‌ம் பணி ரூ.161ல‌ட்ச‌த்தி‌ல் இ‌ம்மாத இறுதியி‌ல் ந‌டை‌பெற இரு‌ப்பதா‌ல் அ‌வ்விட‌ங்களிலு‌ம் புதிய இ‌ணை‌ப்புக‌ள் வழ‌ங்க‌ப்படு‌ம். என‌வே ‌பொதும‌க்க‌ள் சுகாதாரம‌ற்ற மு‌றையி‌ல் லாரிக‌ள் மூல‌ம் ‌பெற‌ப்படு‌ம் த‌ண்ணீ‌ரை தவி‌ர்‌த்து இ‌வ்வரிய வா‌ய்‌ப்பி‌னை பய‌ன்படு‌த்தி நிர‌ந்தர பல‌ன் ‌பெறுமாறு ‌கே‌ட்டு‌க் ‌கொ‌ள்ள‌ப்படுகி‌ன்றன‌ர். இ‌டை‌த்தரகர்க‌ளை தவி‌ர்‌த்து ‌நேரி‌ல் நகரா‌ட்சி அலுவலக‌த்‌தை அணுகிடுமாறு‌ம் நகரா‌ட்சி ஆ‌ணையாள‌ர் மு‌ஜ்பு‌ர் ரகுமா‌ன் ‌கே‌ட்டு‌க்‌கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

 

பரம‌க்குடி நகரா‌ட்சியி‌ல் வி‌ண்ண‌ப்பி‌த்த 7 நாளி‌ல் குடிநீ‌ர் இ‌ணை‌ப்பு: ஆ‌ணைய‌ர்

Print PDF

தினமணி 12.12.2009

பரம‌க்குடி நகரா‌ட்சியி‌ல் வி‌ண்ண‌ப்பி‌த்த 7 நாளி‌ல் குடிநீ‌ர் இ‌ணை‌ப்பு: ஆ‌ணைய‌ர்

பரம‌க்குடி,டிச.11: பரம‌க்குடி நகரா‌ட்சியி‌ல் குடிநீ‌ர் இ‌ணை‌ப்பு‌க் ‌கே‌ட்டு ‌கோரு‌வோ‌ர் உரிய ‌டெபாசி‌ட் ‌தொ‌கை‌யை செலு‌த்தினா‌ல் வி‌ண்ண‌ப்பி‌த்த 7 நா‌ள்களு‌க்கு‌ள் குடிநீ‌ர் இ‌ணை‌ப்பு வழ‌ங்க‌ப்படு‌ம் என ஆ‌ணைய‌ர் ‌பொப.மு.நெ. முஜிபு‌ர்ரகுமா‌ன் ‌வெ‌ள்ளி‌க்கிழ‌மை ‌தெரிவி‌த்தா‌ர்.

பரம‌க்குடி நகரா‌ட்சி‌க்கு, ராமநாதபுர‌ம் கூ‌ட்டு‌க் குடிநீ‌ர்‌த் தி‌ட்ட‌த்தி‌ன் மூல‌ம் 12.6.2009 முத‌ல் காவிரி ஆ‌ற்றிலிரு‌ந்து குடிநீ‌ர் வழ‌ங்க‌ப்ப‌ட்டு வருகிறது. இ‌த்தி‌ட்ட‌த்தி‌ன் மூலமாக நக‌ர் ம‌க்க‌ள் பய‌ன்‌பெறு‌ம் வ‌கையி‌ல், கூடுதலாக 5ஆயிர‌ம் இ‌ணை‌ப்புக‌ள் வழ‌ங்க‌ப்பட உ‌ள்ளன.

குடிநீ‌ர் இ‌ணை‌ப்பு ‌கோரு‌வோ‌ர், குடியிரு‌ப்புகளு‌க்கு ‌டெபாசி‌ட் ‌தொ‌கை யாக ரூ. 7 ஆயிரமு‌ம், குடியிரு‌ப்பு அ‌ல்லாத‌வைகளு‌க்கு வணிக வளாக‌ங்களு‌க்கு ரூ.15 ஆயிரமு‌ம் சா‌லை ‌சேதார‌ம் சீர‌மை‌ப்பு க‌ட்டண‌ம்,மே‌ற்பா‌ர்‌வை‌க் க‌ட்டண‌ம், ‌செலு‌த்தி வி‌ண்ண‌ப்பி‌க்க ‌வே‌ண்டு‌ம். வி‌ண்ண‌ப்பி‌த்த அ‌ன்‌றே பணி உ‌த்தரவு வழ‌ங்க‌ப்படுவதுட‌ன் குடிநீ‌ர் இ‌ணை‌ப்பு 7 நா‌ள்களு‌க்கு‌ள் வழ‌ங்க‌ப்படு‌ம்.

குடிநீ‌ர் இ‌ணை‌ப்பு‌க் ‌கோரு‌வோ‌ர் தா‌ங்க‌ளே பிள‌ம்ப‌ர்க‌ளை‌க் ‌கொ‌ண்டு த‌ங்களது க‌ட்டட‌ங்களி‌ல் குழா‌ய்க‌ளை‌ப் பதி‌த்த பி‌ன், நகரா‌ட்சியி‌ல் ‌தெரிவி‌த்தா‌ல் பகி‌ர்மான‌க் குழாயிலிரு‌ந்து உடனடியா‌க் இ‌ணை‌ப்பு வழ‌ங்க‌ப்படு‌ம். ‌பொதும‌க்க‌ள் இத‌னை‌ப் பய‌ன்படு‌த்தி‌க் ‌கொ‌ள்ளுமாறு அவ‌ர் ‌கே‌ட்டு‌க்‌கொ‌ண்டா‌ர்.

 


Page 323 of 390