Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நாளை காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்

Print PDF

தினமணி 24.11.2009

நாளை காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்

சிவகங்கை, நவ.23: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பகுதிகளுக்கு புதன்கிழமை (நவம்பர் 25) குடிநீர் வழங்குவது நிறுத்தி வைக்கப்படுகிறது என ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட நிர்வாகப் பொறியாளர் பி.எஸ்.ராம்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையம் அமைந்திருக்கும் திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூரில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் புதன்கிழமை மட்டும் குடிநீர் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Last Updated on Tuesday, 24 November 2009 06:22
 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம்

Print PDF

தினமணி 24.11.2009

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம்

சென்னை, நவ. 23: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் திங்கள்கிழமை நிலவரப்படி முறையே நீர்மட்டம், இருப்பு, நீர் வரத்து (விநாடிக்கு) விவரம்:

பூண்டி- 135.76 அடி (140). 1,921 மி..அடி. 523 கன அடி.

சோழவரம்- 60.27 அடி (64.50), 592 மி..அடி, 108 கன அடி.

செங்குன்றம்- 42.16 அடி (50.20), 1,738 மி..அடி, 98 கன அடி.

செம்பரம்பாக்கம்- 76.80 அடி (85.40), 1,605 மி..அடி, 60 கன அடி.

கடந்த ஆண்டு இதே நாளில்...கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அன்று இந்த ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 6,749 மில்லியன் கன அடியாக இருந்தது. ஆனால், இப்போது மொத்த நீர் இருப்பு 5,856 மில்லியன் கன அடியாக உள்ளது.

Last Updated on Tuesday, 24 November 2009 06:24
 

பழுதடைந்த பாலாற்றுக் குடிநீர் குழாயை சரி செய்யும் பணி தீவிரம்

Print PDF

தினமணி 21.11.2209

பழுதடைந்த பாலாற்றுக் குடிநீர் குழாயை சரி செய்யும் பணி தீவிரம்

காஞ்சிபுரம், நவ.20: காஞ்சிபுரம் நகரத்துக்கு வரும் பாலாற்று குடிநீர்க் குழாய் ஓரிக்கை கிராமம் அருகே பழுது ஆனதால் அதனை சரி செய்யும் பணியினை நகராட்சியினர் 2 நாள்களாக மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து நகராட்சி பொறியாளர் கருப்பையா கூறியது: காஞ்சிபுரம் நகரத்துக்கு பாலாற்றிலிருந்து ஓரிக்கை கிராமம் வழியாக 400 மி.மீ. விட்டம் அளவு கொண்ட குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இதில் ஓரிக்கை பஸ் நிலையம் அருகே 6 மீட்டர் நீளம் கொண்ட குழாய் உடைந்து நீர் வியாழக்கிழமை வெளியேறியது. இதனை அறிந்தவுடன் ஜேசிபி, நீரை வெளியேற்றும் லாரி மற்றும் 15 பணியாளர்களுடன் குழாயை மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான 400 மி.மீ. அளவுள்ள குழாய் தாம்பரம் நகராட்சியிடமிருந்து வாங்கிவரப்பட்டுள்ளது.

தற்போது நகரத்திலுள்ள பஸ் நிலையம், ராஜாஜி மார்க்கெட் ஆகிய பகுதிகளிலுள்ள மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு பாலாற்றிலிருந்து கொண்டுவரப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டு, திருப்பார்க்கடலிலிருந்து குடிநீர் கொண்டுவந்து ஏற்றப்பட்டது.

இதன்மூலம் நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவுக்குள் குழாய் பழுது சரிசெய்யப்படும் என்றார்.

 


Page 328 of 390