Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

உசிலம்பட்டி நகராட்சியில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம்

Print PDF

தினத்தந்தி              17.07.2013

உசிலம்பட்டி நகராட்சியில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம்

உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் கடந்த சில வாரங்களாகவே குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. பொதுமக்கள் கூடுதல் விலை கொடுத்து மினரல் வாட்டர் கேன்களை வாங்கி பயன்படுத்தினர். நடுத்தர மக்கள் உவர்நீரையே குடிநீராக பயன்படுத்தினர். பலர் தொலைதூரங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் 24 வார்டுகளிலும் டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க நகராட்சியில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 24 வார்டுகளுக்கும் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவித்து டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனை நகராட்சி தலைவர் பஞ்சம்மாள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைவருக்கும் ஒரே அளவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

 

நாளை குடிநீர் வாரிய குறை தீர்ப்பு கூட்டம்

Print PDF

தினமணி             12.07.2013

நாளை குடிநீர் வாரிய குறை தீர்ப்பு கூட்டம்

குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெற உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்தி:

குடிநீர் வாரியம் சார்பில் மாதத்தின் 2-ஆவது சனிக்கிழமைகளில் குறைதீர்க் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் படி இம்மாதத்திற்கான குறைதீர்க் கூட்டம் ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர் மற்றும் கழிவுநீர் குறித்த பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம்.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, மாயவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிநீர் வாரிய பகுதி அலுவலங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீர்க் கூட்டம் நடைபெறும்.

ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் குடிநீர் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சேலத்தில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமணி              10.07.2013

சேலத்தில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

: சேலம் மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் பழுது ஏற்பட்டிருப்பதால், புதன், வியாழக்கிழமைகளில் (ஜூலை 10, 11) குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதானக் குழாயில் குரங்குசாவடி அருகே கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீருடன் மாசு கலக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, கசிவை அடைத்து, சரி செய்யும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் புதன், வியாழக்கிழமைகளில் மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட மாட்டாது.

எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையர் மா.அசோகன் கேடுக்கொண்டார்.

 


Page 34 of 390