Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மைசூர் மேயர் தகவல் ஏரிகள் அருகே சுத்திகரிப்பு மையம்

Print PDF

தினகரன்            26.05.2010

மைசூர் மேயர் தகவல் ஏரிகள் அருகே சுத்திகரிப்பு மையம்

மைசூர், மே.26: மைசூர் மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கும் ஏரிகளுக்கு அருகில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென மேயர் சந்தேஷ்சாமி தெரிவித்தார்.

மூன்று ஏரிகளையும் பர்வையிட்ட மேயர் செய்தியாளர்களிடையே கூறியதாவது: மைசூர் மாநகருக்கு குக்கரஹள்ளி, கரஞ்ஜி மற்றும் தால்வோகெரே ஆகிய ஏரிகளிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏரிகள் அனைத்தும் மாசடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளை அழைத்து சென்று ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து ஏரிகளிலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளுக்கு விரைவில் டெண்டர்கள் கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும்.

சித்தார்த் லேஅவுட் அருகிலுள்ள கரஞ்சி ஏரி முழுவதும் சாக்கடையில் வரும் நீர் கல்ந்துள்ளது. இதனை உரிய ரசாயனக் கலவைகளுடன் சுத்தீகரிப்பு செய்து குடிநீராக விநியோகிக்கப்படூம். பொதுமக்களும் கழிவுகளை ஏரிகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளது.

மாநகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான கால்வாய்கள் மூன்று மீட்டர் அகலம் கொண்டதாகும். இந்த பைப்லைன்கள் எரகானஹள்ளியிலிருந்து 2கிலோமீட்டர் மற்றும் எம்.ஆர்.சி காலனியிலிருந்து 4கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.