Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: 31-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

Print PDF

தினமணி 21.07.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: 31-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

பொன்னேரி, ஜூலை 20: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் நடைபெற்று வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை 31-ம் தேதி தமிழக முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைக்க உள்ளார் என துணை முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

÷சென்னையில் ஏற்படும் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் மீஞ்சூர் கடலோரம் அமைந்துள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் ரூ.2,300 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

÷இதையடுத்து கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து சென்னை நகருக்கு குடிநீர் விநியோகத்தை முதல்வர் மு.கருணாநிதி வருகிற 31-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

÷இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு வந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலை அதிகாரிகளிடம் திட்ட பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

÷பின்னர் வரும் 31-ம் தேதி முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் சென்னை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு அதே பகுதியில் தொடக்க விழா நடைபெறவுள்ள இடத்தை பார்வையிட்டார்.

÷இதையடுத்து செய்தியாளர்களிடம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது: கடல் நீரை குடிநீராக்கும் ஆலையின் திட்டப் பணிகள் முழுதும் முடிவடைந்துள்ளதால் 31-ம் தேதி சென்னை நகருக்கு குடிநீர் விநியோகத்தை முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார். ÷திருவள்ளூர் மாவட்ட ராஜேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.