Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை கருணாநிதி, 31-ந் தேதி தொடங்கி வைக்கிறார்; ஏற்பாடுகளை ஸ்டாலின் பார்வையிட்டார்

Print PDF

மாலை மலர் 21.07.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை கருணாநிதி, 31-ந் தேதி தொடங்கி வைக்கிறார்; ஏற்பாடுகளை ஸ்டாலின் பார்வையிட்டார்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை கருணாநிதி, 31-ந் தேதி தொடங்கி வைக்கிறார்;
ஏற்பாடுகளை ஸ்டாலின் பார்வையிட்டார்

மீஞ்சூர், ஜுலை.21- சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான கட்டுமானப்பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டங்களும் நடந்து முடிந்துவிட்டன.

இந்த திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி 31-ந் தேதி தொடங்கிவைக்கிறார். இந்த திட்டம் மூலம் சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும்.

இந்த திட்டப்பணிகள் நிறைவடைந்து, தொடக்க விழாவுக்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்த பணிகளின் தன்மை குறித்தும், முதல்-அமைச்சர் கருணாநிதி வருகையையொட்டியும் ஆய்வு செய்யவும், அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கவும் துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் காட்டுப்பள்ளி கிராமத்துக்கு வந்தார்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ், பொன்னேரி துணை கலெக்டர் குமார், தாசில்தார் லலிதா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கே.ஜி.பாஸ்கர் சுந்தரம், மாவட்ட தி.மு.. இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ்ராஜ், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஈஸ்வரி ராஜா, கவுன்சிலர் தமிழரசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் கப்பல் கட்டும் தளம், ராணுவ தளம் ஆகிய இடங்களில் தனியார் நிறுவனம் ஒன்று பணிகளை மேற்கொண்டு செய்து வருகிறது. அந்த பணிகளையும், கடல் மண் ஆழப்படுத்தும் இடத்தில் நடைபெறும் பணிகளையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.

அந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் தட்சிணாமூர்த்தி, சிவநேசன் ஆகியோர் துணை முதல்-அமைச்சர் ஸ்டாலினை வரவேற்று பணிகள் நடைபெறுவதை விளக்கிக்கூறினார்கள்.