Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் மகப்பேறு உதவித்திட்டத்தில் 1511 தாய்மார்கள் பயன்

Print PDF

தினகரன்   20.05.2010

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் மகப்பேறு உதவித்திட்டத்தில் 1511 தாய்மார்கள் பயன்

கிருஷ்ணகிரி, மே 20: கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் மகப்பேறு உதவித்திட்டத்தின் கீழ் 1511 தாய்மார்களுக்கு ரூ.90.66 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக நகரமன்றத்தலைவி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசின் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்து, 141 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ், 8 பயனாளிகளுக்கு தலா ரூ.600 வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 800க்கான காசோலைய என மொத்தம் ரூ.8.46 லட்சத்திற்கான காசோலை யினை வழங்கினார்.

பின்னர் நகர்மன்ற தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் இதுவரை 1511 கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2006&07ம் ஆண்டில் 50 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சமும், 2007&08ம் ஆண்டில் 129 பயனாளிகளுக்கு ரூ.7.74 லட்சமும், 2008&09 ம் ஆண்டில் 558 பயனாளிகளுக்கு ரூ.33.48 லட்சமும், 2009&2010ம் ஆண்டில் 633 பயனாளிகளுக்கு ரூ.37.98 லட்சமும், 2010&2011ம் ஆண்டில் முதற்கட்டமாக 141 பயனாளிகளுக்கு ரூ.8.46 லட்சமும் என மொத்தம் ரூ.90 லட்சத்து 66 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் பிரசவித்த தாய்மார்களுக்கு தலா ரூ.600 வீதம் இது வரை 440 பயனாளிகளுக்கு ரூ. 2. 64 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, நகராட்சி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள்