Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூரில் விழா 1300 பேருக்கு மகப்பேறு திட்ட நிதியுதவி வழங்கும் விழா

Print PDF

தினகரன்     21.05.2010

கடையநல்லூரில் விழா 1300 பேருக்கு மகப்பேறு திட்ட நிதியுதவி வழங்கும் விழா

கடையநல்லு£ர், மே 21: கடையநல்லு£ர் நகராட்சியில் டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங் கும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் இப்ராகிம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் காளிராஜ் முன்னிலை வகித்தார். டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு கால திட்டத்தின் கீழ் 1306 பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ பேசியதாவது:

கடையநல்லு£ர் நகராட்சி பகுதியில் இத்திட்டத்தின் கீழ் ஆயிரத்து 700 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் தற்போது சுமார் ஆயிரத்து 300 பேருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 400 பேருக்கு அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பணம் வழங்கப்படும். கடையநல்லு£ர் பகுதியில் இஸ்லாமிய மாணவர்களுக்கென தனியாக ஒரு விடுதி அமைக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அதை பரிசீலனை செய்வதாக முதல்வர் கூறியுள்ளார். கடையநல்லு£ரில் புதிய குடிநீர் திட்டத்திற்காக தமிழக அரசு 22 கோடி ரூபாய் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்காக வரும் ஆகஸ்ட் 6ம் தேதி துணை முதல்வர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்ட ஒப்புதல் வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

சுகாதார பணிகள் இணை இயக்குனர் மீரான் மைதீன், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காமராஜ், முன்னாள் சேர்மன் அய்யாத்துரை, இடைகால் மாரியப்பன், சிவராமகிருஷ்ணன், முருகேசன், திமுக மாவட்ட பிரதிநிதி கருப்பண்ணன், தென்காசி பாராளுமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் பாக்கியராஜ், ஆலங்குளம் செல்வராஜ், நகராட்சி சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்