Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாவட்டத்தில் 5ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு ரூ.113 கோடி சுழல்நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்       25.05.2010

வேலூர் மாவட்டத்தில் 5ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு ரூ.113 கோடி சுழல்நிதி ஒதுக்கீடு

வேலூர், மே 25:  வேலூர் மாவட்ட மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி, நேரடி கடன் வழங்க ரூ.113 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மகளிர் திட்ட அலுவலர் பிச்சைக்கண்ணு கூறினார்.

இதுகுறித்து தினகரன் நிருபரிடம் அவர் கூறியதாவது:

மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு திறன் வளர்த்தல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் தற்போது 4 ஆயிரத்து 955 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

இந்த குழுக்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், புதிய மகளிர் குழுக்களை உருவாக்கவும், பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள இந்த கூட்டமைப்புகளில் 65 கூட்டமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. 180 கூட்டமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. தற்போதுள்ள 4 ஆயிரத்து 955 மகளிர் குழுக்களில் 4 ஆயிரத்து 350 குழுக்களுக்கு சுழல்நிதியாகவும், 605 குழுக்களுக்கு நேரடி கடனாகவும் வழங்க ரூ.113 கோடி வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நடப்பாண்டு வேலூர் மாவட்டத்தில் நகரப்பகுதிகளில் 700 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், கிராமப்புறங்களில் ஆயிரத்து 550 மகளிர் சுயஉதவிக்குழுக்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 250 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட உள்ளன.

மகளிர் குழுக்களை ஒருங்கிணைந்து செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ள கூட்டமைப்புகளுக்கு மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் வணிக நிர்வாகம், கணக்குகளை கையாளுதல் என்று ஆளுமை சார்ந்த ஒன்பது வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது உதவி திட்ட அலுவலர் ரமேஷ்பாபு உடன் இருந்தார்.