Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி      26.05.2010

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

மதுரை, மே 25: டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணிப் பெண்கள் பயன்பெற நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு ரூ.12 கோடியே 65 லட்சத்து 43 ஆயிரம் ஒதுக்கியுள்ளதாக ஆட்சியர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு காலத்துக்கு முன்னர் 3 மாதங்களுக்கு ரூ.3,000-ம், பேறுகாலத்துக்குப் பின் 3 மாதங்களுக்கு ரூ.3,000-ம் ஆக மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. பிரசவ காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் மதுரை மாநகர மக்கள் பயன்பெற ரூ.4 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரமும், புறநகர் மக்கள் பயன்பெற ரூ.8 கோடியே 8 லட்சத்துக்கு 56 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி மாநகராட்சி நகர் நல அலுவலர் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்களிடம் நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம். அதன் விவரம் வருமாறு:

கள்ளந்திரி-98942 52178, சமயநல்லூர்-99444 38078, அலங்காநல்லூர்-99658 78582, கச்சக்கட்டி-97919 60917, டி.கல்லுப்பட்டி-98654 30733, கள்ளிக்குடி-94439 51740, செக்கானூரணி-94426 33166, திருப்பரங்குன்றம்-99944 06840, கருங்காலக்குடி-93452 07554, வெள்ளலூர்-94420 63430, தொட்டப்பநாயக்கனூர்-94436 74835, செல்லம்பட்டி-94435 67787, எழுமலை-97909 73133, மதுரை மாநகராட்சி அலுவலர்-94437 39501.

ஏழை கர்ப்பிணிப் பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிதியுதவி பெற்று பிரசவ காலத்தில் உடல் நலம் பேணுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.