Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மத்திய அரசு திட்டம் குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி முகாம்

Print PDF

தினகரன் 06.08.2010

மத்திய அரசு திட்டம் குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி முகாம்

பொள்ளாச்சி, ஆக 6: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மத்திய அரசின் திட்டம் குறித்து விளக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சிமுகாம் நேற்று துவங்கியது.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள வெண்ணிலா திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான 2 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இப்பயிற்சியினை அளிக்கும் விழுப்புரம் மாவட்டத்தைசேர்ந்த ரிவார்டு சொசைட்டி எனும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம் என் பவர் கூறியதாவது:

மத்திய அரசு சார்பில் பொன் விழா சுயவேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிராமங்கள், பேரூராட்சி மற்றும் நகர் புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் சுயமாக தொழில் துவங்க மத்திய அரசு 75 சதவிகித நிதியையும், மாநில அரசு 25 சதவிகித நிதியையும் வழங்குகின்றன.இத்திட்டம் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தப் படுகிறது. தற்போது, பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கென முதல்கட்ட நடவடிக்கை யாக பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

பொள் ளாச்சி வட்டாரத்தில் உள்ள ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர், கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், ஒடையகுளம் ஆகிய 7 பேரூராட்சிகள், கிணத்துக்கடவு, பெரிய நெகமம், செட்டிபாளையம் மற்றும் ஒத்தக்கால்மண்டபம் ஆகிய 4 பேரூராட்சிகள் என மொத்தம் 11 பேரூராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான 2 நாள் பயிற்சி துவங்கியுள்ளது.

இதில் மத்திய அரசின் இத்திட்டத்தின் நோக்கம், செயல்பாடு, இதன் மூலம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கிடைக்கும் பயன்கள் உள்ளிட்டவை குறித்து தெளிவாக விளக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுவிலும் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுத்து பேரூராட்சிக்கு 6 பிரதிநிதிகள் என 66 மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதிகளுக்கு பயற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இரண்டாவது நாளான இன்றும் இப்பயிற்சி நடைபெறுகிறது.