Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

988 மகளிருக்கு மகப்பேறு நிதி உதவி

Print PDF

தினமணி 16.08.2010

988 மகளிருக்கு மகப்பேறு நிதி உதவி

பவானி,ஆக.​ 15: பவானி நகராட்சிப் பகுதியில் வசிக்கும் மகளிர் 988 பேருக்கு ரூ42.86 லட்சம் மகப்பேறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பவானி நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா,​​ ஆணையர் ​(பொ)​ பழனிச்சாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.​ நகர்மன்றத் தலைவர் எம்.ஆர்.துரை தேசியக் கொடியேற்றினார்.​ பவானி கூடல் ரோட்டரி சங்க நிர்வாகி சரவணன்,​​ நுகர்வோர் சங்க நிர்வாகி வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர்.

சுகாதார ஆய்வாளர் கே.பேச்சிமுத்து வரவேற்றார்.​ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 20 மகளிருக்கு ரூ1.20 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும்,​​ கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பவானி நகராட்சியைச் சேர்ந்த 988 மகளிருக்கு ரூ6 ஆயிரம் வீதம் ரூ42.86 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது என விழாவில் தெரிவிக்கப்பட்டது.

நகர்மன்ற உறுப்பினர்கள் கு.செல்வராஜ்,​​ வரதராஜ்,​​ பாலமுருகன்,​​ அண்ணாமலை,​​ கணேசன்,​​ நகராட்சிப் பள்ளித் தலைமையாசிரியை வைஜெயந்தி பங்கேற்றனர்.​ மாணவ,​​ மாணவியரின் சுதந்திர தின கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.