Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கர்ப்பிணிகளுக்கு அரசு நிதியுதவி நகராட்சி தலைவர் வழங்கினார்

Print PDF

தினகரன் 19.08.2010

கர்ப்பிணிகளுக்கு அரசு நிதியுதவி நகராட்சி தலைவர் வழங்கினார்

பொள்ளாச்சி, ஆக 19: பொள்ளாச்சி நகராட்சி சார்பில் 124 கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு அரசின் நிதி உதவி நேற்று வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சி சார்பில் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு அரசின் நிதி உதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நாச்சிமுத்து நகராட்சி பிரசவ விடுதி வளாகத்தில் ஆணை யாளர் வரதராஜ் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி பயனாளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கினார். இதில் முன் னாள் எம்.எல்.. ராஜூ, நகராட்சி பொறியாளர் மோகன், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி கூறியதாவது:

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்பு மூன்று மாதங்களுக்கு ரூ. 3 ஆயிரம், பிரசவத்துக்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ரூ. 3 ஆயிரம் என மொத்தம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சிறப்பான ஒரு திட்டத்தை அறிவித்தார். கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் பெற்றெடுத்து வளர்க்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் இந்த நிதி உதவியைப் பெற 190 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 66 பயனாளிகளுக்கு கடந்த 15ம் தேதி சுதந்திர தின விழாவின் போது நிதி உதவி வழங்கப்பட்டது. தற்போது 124 பயனாளிகளுக்கு இந்தி நிதி வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 98 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சி பிரசவ விடுதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரசவங்களும் சிறந்த முறையில் நடைபெறுகிறது. ஆகவே கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.