Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மகளிர் திட்ட செயல்பாடு கள ஆய்வு

Print PDF

தினகரன் 02.09.2010

மகளிர் திட்ட செயல்பாடு கள ஆய்வு

திண்டுக்கல் செப். 2: திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் திட்ட செயல்பாடுகள் குறித்து சென்னை மகளிர்நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் கோபால் களஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிபட்டியில் பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கிராமச்சந்தை பணியை ஆய்வு செய்தார். ஆத்தூர் ஒன்றியம் என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் செயல்படும் மகளிர் சுயஉதவி குழுக்கள், திடக்கழிவு மேலாண்மை பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு மறு உபயோகப் பொருட்கள் தயார் செய்யும் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

பின்பு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகையில், ``மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் வங்கியாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். அதே போல் கடனை திரும்பச் செலுத்துவதில் சுயஉதவிக் குழுக்களும் அக்கறை காட்ட வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் கலெக்டர் வள்ளலார் மகளிர் திட்ட அலுவலர் பிரேமா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருண்மணி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளளர் அர்ஜூன் முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.