Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.18 லட்சத்திற்கு மகப்பேறு உதவித்தொகை நகர்மன்ற தலைவர் வழங்கினார்

Print PDF

தினகரன் 05.02.2010

ரூ.18 லட்சத்திற்கு மகப்பேறு உதவித்தொகை நகர்மன்ற தலைவர் வழங்கினார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்தொகை ரூ.18 லட்சத்திற்கான காசோலையை பயனாளிகளுக்கு நகர்மன்ற தலைவர் வழங்கினார்.

தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ காலத்தில் சத்துணவு உணவு, பழம் உள்ளிட்டவைகளை சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்தொகை வழங்கிட முடிவு செய்தது. இந்த தொகையினை கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன் மூன்று மாதங்களும், பிரசவ காலத்திற்கு பின் மூன்று மாதமும் என 6 மாதங்களுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்து, 300 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.18 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பவுலோஸ், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், நகர தி.மு.. செயலாளர் நவாப், நகர்மன்ற துணைத்தலைவர் பழனி, நகர்மன்ற உறுப்பினர்கள் கடலரசுமூர்த்தி, பழனி, சின்னதம்பி, ஜமுனா புருஷோத்தமன், மகேஸ்வரி பாபு, லூர்துமேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இது குறித்து நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் கூறியதாவது:

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2006&07ம் ஆண்டு 50 நபர்களுக்கு ரூ.3 லட்சமும், 2007&08 ம் ஆண்டு 129 நபர்களுக்கு ரூ.7.74 லட்சமும், 2008&09ம் ஆண்டு 558 நபர்களுக்கு ரூ.33.48 லட்சமும், 2009&2010ம் ஆண்டு இதுவரை 633 நபர்களுக்கு ரூ.37.98 லட்சமும் என மொத்தம் 1,370 நபர்களுக்கு ரூ.82.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் பிரசவித்த தாய்மார்களுக்கு தலா ரூ.600 வீதம் 432 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 200 வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பரிதாநவாப் கூறினார்.

Last Updated on Friday, 05 February 2010 11:47