Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மன்றத்துக்கு 86 பெண் உறுப்பினர்கள் தேர்வு

Print PDF

தினமணி 07.04.2010.

மாநகராட்சி மன்றத்துக்கு 86 பெண் உறுப்பினர்கள் தேர்வு

பெங்களூர், ஏப்.6: பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக அதிகபட்சமாக 86 பெண் உறுப்பினர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

÷8 ஆண்டுகளுக்குப் பிறகு பெருநகர பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு கடந்த மாதம் 28-ம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. 198 வார்டுகளில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

÷இதில் பாரதிய ஜனதா கட்சி 111 வார்டுகளை கைப்பற்றி மாநகராட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 65 வார்டுகளிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 15 வார்டுகளிலும், சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றிபெற்றன.÷

இத் தேர்தலில் பெண்கள் பொது வார்டு என்று பெண்களுக்கு 36 வார்டுகள், பிற்படுத்தப்பட்ட பி பிரிவு சமூக பெண்களுக்கு 4 வார்டுகள், பிற்படுத்தப்பட்ட ஏ பிரிவு சமூக பெண்களுக்கு 18 வார்டுகள் எஸ்.சி. சமூக பெண்களுக்கு 8 வார்டுகள் என மொத்தம் 67 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இதுமட்டுமின்றி ஆண், பெண் இருபாலருக்கும் உரிய வார்டுகளிலும் பெண்கள் போட்டியிட்டனர். இதில் 19 பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்றனர். ஒட்டுமொத்தமாக 86 வார்டுகளில் பெண்கள் வெற்றிபெற்றனர்.

÷பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் வரலாற்றில் அதிக அளவிலான பெண்கள் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. மொத்த வார்களில் பாதி இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.

இதனால் மாநகராட்சி மன்றத்தில் 86 பெண் உறுப்பினர்கள் இடம்பெற உள்ளனர். எனவே, அடுத்த 5 ஆண்டுகள் பெருநகர் பெங்களூர் மாநகராட்சி மன்ற நிர்வாகத்தில் பெண்களின் ஆதிக்கமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜ்ஜ்

Last Updated on Wednesday, 07 April 2010 09:14