Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் பிரசவ வார்டு

Print PDF

தினகரன்    20.05.2010

அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் பிரசவ வார்டு

உடுமலை, மே 20: உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் புதிய பிரசவ வார்டு கட்டப்படுகிறது. உடுமலை அரசு மருத்துவமனையில் 24 படுக்கை வசதியுடன் பிரசவ வார்டு உள்ளது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை பெண்கள் இங்குதான் அதிகளவில் பிரசவத்துக்கு வருகின்றனர். போதிய இடவசதியின்றி கர்ப்பிணிகள், குழந்தை பெற்றவர்கள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. எனவே கூடுதல் படுக்கை வசதி செய்து தர வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை அரசு ஏற்று புதிய பிரசவ வார்டு கட்ட ரூ.1 கோடியை ஒதுக்கியது. அதன் உதவியால் 30 படுக்கைகள் மற்றும் நவீன வசதிகளுடன் புதிய பிரசவ வார்டு கட்டப்படுகிறது. அதற்கான பூமிபூஜை விழா நேற்று மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை நடந்தது. நகராட்சி தலைவர் சி.வேலுச்சாமி அதில் பங்கேற்று புதிய கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் போட்டு பேசினார். அவரை மருத்துவமனை தலைமை டாக்டர் தமிழ்மணி சால்வை அணிவித்து வரவேற்றார்.

விழாவில் கவுன்சிலர் வக்கீல் சிதம்பரசாமி, தலைமை நர்ஸ் காந்திமதி, நர்ஸ் திலகவதி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் விவேகானந்தம், மற்றும் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண் டனர். புதிய கட்டடத்துக்கு பிரசவ வார்டு மாற்றப்பட்ட பிறகு அந்த கட்டடத்தில் கண் சிகிச்சை பிரிவு செயல்பட இருக்கிறது. நகராட்சி தலைவர் அடிக்கல்

 

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பயிற்சி

Print PDF

தினமலர்    20.05.2010

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பயிற்சி

வால்பாறை : வால்பாறை நகராட்சி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மேம்பாட்டு பயிற்சி நேற்று துவங்கியது. இந்த பயிற்சியை வால்பாறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் கருணாகரன் துவக்கி வைத்தார். முகாமில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரபாகரன், சி.எம்.எஸ்.எஸ்.,மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகஜோதி, ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பயிற்சி

Print PDF

தினமலர்          18.05.2010

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பயிற்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுய குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மேம்பாட்டு பயிற்சி கொடுக்கப்படுகிறது. நகராட்சி கமிஷனர் வரதராஜ் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலக திட்ட அலுவலர் ராஜ்குமார் பயிற்சி அளித்தார். முகாம் பற்றி திட்ட அலுவலர் கூறியதாவது: பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி கொடுத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் 7,200 பேர் உள்ளனர். அவர்களில் 20 பேருக்கு ஒருவரை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கப்படுகிறது. மொத்தம் 358 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேரை கொண்டு ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் குழுவுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. வறுமை நிலை குடும்பத்தில் உள்ள பெண்களை தேர்வு செய்து குழுக்கள் அமைப்பது, அவர்களுக்குள் பணத்தை சேமித்து நிதி ஆதாரத்தை உருவாக்குதல், அரசின் திட்டங்களை பயன்படுத்தி நிதி ஆதாரத்தை பெருக்குதல், சுய தொழில் துவங்கி பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளுதல் பற்றி பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு, திட்ட அலுவலர் கூறினார். சுய உதவிக்குழுக்கள் அமைப்பு, செயல்பாட்டு முறைகள்; குழுக்களின் நன்மை, தீமைகள்; பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள்; சமுதாயத்தில் குழுக்களின் மேம்பாடு என்ற தலைப்புகளில் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.

 


Page 23 of 41