Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி

Print PDF

தினமலர் 29.04.2010

கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சேர்மன் கெய்க்வாட்பாபு நிதியுதவி வழங்கினார்.நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. 35 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதியை சேர்மன் கெய்க்வாட்பாபு வழங்கினார். இன்ஜினியர் புவனேஸ்வரி, மேற்பார் வையாளர் வாசு, மேலாளர் சிவசங்கரன், எழுத்தர் பாபு, கணக்கர் முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 29 April 2010 06:01
 

கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கல்

Print PDF

தினமலர் 26.04.2010

கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் 930 கர்ப்பிணிகளுக்கு 30 லட் சம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.விழுப்புரம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கான அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்தது. சேர்மன் ஜனகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஊழியர் அண்ணாதுரை வரவேற்றார். கமிஷனர் சிவக் குமார், பொறியாளர் பார்த் திபன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பொன்முடியின் துணைவியார் விசாலாட்சி பங்கேற்று 930 கர்ப்பிணிகளுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு நிதியுதவி வழங்கினார். நகராட்சி ஆய்வாளர்கள் பாபு, முருகேசன், நகரமைப்பு ஆய்வாளர் கோகுல், முருகன், சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 26 April 2010 06:49
 

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 13 லட்சம் நிதியுதவி

Print PDF

தினமணி 13.04.2010

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 13 லட்சம் நிதியுதவி

பெ.நா.பாளையம், ஏப். 12: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் உலக மகளிர் தினவிழா பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி மன்றத் தலைவர் பத்மாலயா சீனிவாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.வீரபத்திரன்,அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை மகளிர் திட்ட களப் பணியாளர் ஜெயமணி மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நரசிம்மநாயக்கன்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கே.குணசேகரன் பேசியது:

தற்போது மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பொருளாதார ரீதியில் மிகுந்த முன்னேற்றமடைந்து காணப்படுகின்றன. பெற்ற கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துகின்றனர். இது அவர்களுக்கு மேலும் கூடுதல் கடன்களை வழங்க எங்களை ஊக்குவிக்கிறது. இவர்கள் சமுதாய மேம்பாட்டுப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.

தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அகல் குழுவுக்கு ரூ. 5 லட்சம், ஓம்சக்தி மற்றும் மகா குழுக்களுக்கு தலா ரூ. 1.20 லட்சம், வெண்புறா குழுவுக்கு ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலைகளை, வங்கி மேலாளர் கே.குணசேகரன், பத்மாலயா சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.

பல்வேறு சுயஉதவிக் குழுக்களுக்கு 60ஆயிரம் மதிப்பில் சுழல் நிதியும் வழங்கப்பட்டது. இதனையடுத்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 


Page 25 of 41