Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

நகராட்சி சார்பில் மகளிர் தினவிழா

Print PDF

தினமணி 09.03.2010

நகராட்சி சார்பில் மகளிர் தினவிழா

ராசிபுரம்,மார்ச்.8: ராசிபுரம் நகராட்சி அலுவலகம் சார்பில் மகளிர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் கு.தனலட்சுமி தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.ரங்கசாமி, பொறியாளர் ஆர்.இளங்கோவன், துப்புரவு அலுவலர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் என்.ஆர்.ராமதாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.

இதில் சுவர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் குழுப் பெண்கள் பங்கேற்றனர். கோலப்போட்டிகள், பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சமுதாய அமைப்பாளர்கள் பி.சாந்தி, எம்.தமிழரசி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 09 March 2010 09:51
 

மகப்பேறு உதவி

Print PDF

தினமலர் 06.03.2010

மகப்பேறு உதவி

சிவகங்கை : அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை அதிகரிக்க, "ஜனனி சுரக்ஷா' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன்படி, மாநகராட்சி, நகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு 600 ரூபாய், கிராமங்களில் 700 என உதவி வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில், 10 அரசு மருத்துவமனை, ஆறு தாய், சேய் மருத்துவமனை, 46 ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி மருத்துவமனைகளில், 2009 ஜூலை 1 ம் தேதி முதல் நிதி உதவி வழங்கப்பட்டது. இதன்படி 11 ஆயிரம் பெண்களுக்கு 71 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. தமிழக அரசின் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் பிப்ரவரி வரை, 11 ஆயிரத்து 675 பேருக்கு, தலா 6,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Last Updated on Saturday, 06 March 2010 10:12
 

"சைதாப்பேட்டை, புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனைகளில்' விரைவில் விளையாட்டுக் கூடம்

Print PDF

தினமணி 06.03.2010

"சைதாப்பேட்டை, புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனைகளில்' விரைவில் விளையாட்டுக் கூடம்

சென்னை, மார்ச் 5:சைதாப்பேட்டை, புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனைகளில் விரைவில் குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடங்கள் அமைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை புரசைவாக்கம் மற்றும் பெருமாள்பேட்டை பகுதிகளில் உள்ள 24 மணி நேர மகப்பேறு நலவாழ்வு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடங்களை வியாழக்கிழமை திறந்து வைத்த மேயர் மா. சுப்பிரமணியன் இதை தெரிவித்தார்.

இந்த விளையாட்டுக் கூடத்தில் சிறிய பொம்மைகள், சறுக்கு மரம், அசையும் நாற்காலிகள், உட்காரும் பொம்மைகள், விளையாட்டு கார், திருகு பொம்மைகள் என ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் இடம் பெறும்.

Last Updated on Saturday, 06 March 2010 06:08
 


Page 29 of 41