Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

சிறந்த மகளிர் சுய உதவி குழுவுக்கு பரிசு

Print PDF

தினமணி 25.02.2010

சிறந்த மகளிர் சுய உதவி குழுவுக்கு பரிசு

சென்னை, பிப். 24: சென்னை மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாநகராட்சி சார்பில் புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

சென்னை மாவட்ட அளவில் 2008}2009}ம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களாக மண்டலம் 9}ல் உள்ள யமுனை, சிந்து பாரதி ஆகிய குழுக்களும், மண்டலம் 5}ல் உள்ள சரோஜினி குழுவும் தேர்வு செய்யப்பட்டன.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தக் குழுக்களுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் பரிசு காசோலையை மேயர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

இதுபோல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2008}2009}ம் ஆண்டில் அதிக அளவில் கடனுதவி அளித்த ரெப்கோ வங்கிக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ. 10 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த வங்கி கிளைக்கான முதல் பரிசுத் தொகை ரூ. 15 ஆயிரம் தண்டையார்பேட்டை ரெப்கோ வங்கி கிளைக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு ரூ. 10 ஆயிரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அசோக்நகர் கிளைக்கும், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம் ரெப்கோ வங்கி வியாசர்பாடி கிளைக்கும் வழங்கப்பட்டது.

Last Updated on Thursday, 25 February 2010 10:50
 

மகளிர் சுயஉதவிக்குழுவினர் தொழில் துவங்க ரூ.7 லட்சம் நிதி

Print PDF

தினமலர் 23.02.2010

மகளிர் சுயஉதவிக்குழுவினர் தொழில் துவங்க ரூ.7 லட்சம் நிதி

சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் சிறுதொழில் துவங்க ஏழு லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் சுவர்ண ஜெயந்தி திட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பல்வேறு சிறுதொழில் துவங்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முகாம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் மார்ச்சில் துவங்குகிறது. சுழல்நிதி, தனிநபர் கடன், குரூப் கடன், சமுதாய கட்டுமான பணிகள், கூலி, வேலைவாய்ப்பு திட்டம் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கு 30 சதவீதம், சிறுபான்மையினருக்கு 15 சதவீதம், உடல்ஊனமுற்றோருக்கு 5 சதவீதம் என கணக்கெடுக்கப்பட்டு, சிறுதொழில் துவங்க நிதி வழங்கப்படுகிறது. இதற்காக சோழவந்தான் பேரூராட்சிக்கு 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி நிர்வாக அலுவலர் உமாகாந்தன் கூறுகையில், ""தற்போது மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பிளாஸ்டிக் பொருளை பிரித்தெடுத்து மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி அளிக்கப்படுகின்றன,'' என்றார். பேரூராட்சி தலைவர் கலாவதி, துணைதலைவர் அண்ணாத்துரை, கவுன்சிலர்கள் பெரியசாமி, இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:09
 

களியக்காவிளை பேரூராட்சியில் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

Print PDF

தினமணி 08.02.2010

களியக்காவிளை பேரூராட்சியில் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

களியக்காவிளை
, பிப். 7: களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு களியக்காவிளை பேரூராட்சித் தலைவி எஸ். இந்திரா தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் இரா. சங்கர், துணைத் தலைவர் சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பேரூராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. சுயஉதவிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமாரி மற்றும் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 10:14
 


Page 30 of 41