Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏழை மாணவர்களுக்கு இலவச கணினி செல்போன் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

Print PDF

தினமணி 06.05.2010

ஏழை மாணவர்களுக்கு இலவச கணினி செல்போன் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

குடியாத்தம், மே. 5: குடியாத்தம் நகராட்சி சார்பில், மத்திய அரசின் ஸ்வர்ண ஜெயந்தி திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய 6 மாத பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.

நகராட்சி நிர்வாகமும், சிஎஸ்ஐ கணிப்பொறி நிறுவனமும் இணைந்து இப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.

நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் எஸ். ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கணிப்பொறி நிறுவன இயக்குநர் வி.ஜே. ஞானேஸ்வரன் வரவேற்றார்.

நகர்மன்றத் தலைவர் எம். பாஸ்கர் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கினார். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 300 உதவித்தொகை வழங்கப்படும்.