Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டம்: பயனாளிகள் தேர்வு இன்று துவக்கம்

Print PDF

தினமணி    21.05.2010

ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டம்: பயனாளிகள் தேர்வு இன்று துவக்கம்

கோவை, மே 20: ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு முகாம் கிழக்கு மண்டலத்தில் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.

÷இது குறித்து மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

÷ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நகர்புற ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் கோவை மாநகராட்சியில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் ஏற்கெனவே பல இடங்களில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் கூடுதல் எண்ணிக்கையில் பயனாளிகளை தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முகாம், ராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேனிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. உதவிப் பொறியாளர் குருவம்மாள் தலைமையில் இம் முகாம் நடைபெறும். இதில் 23, 24-வது வார்டுகளை சேர்ந்த ஏழை பயனாளிகள் பங்கேற்கலாம்.

÷மதுரைவீரன் கோயில் வீதி, 9-வது வார்டு நீலிக்கோனாம்பாளையம் பகுதிகளைத் சேர்ந்த பயனாளிகள், நீலிக்கோனாம்பாளையம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம்.

11-வது வார்டுக்கு உட்பட்ட கமலா குட்டை, கக்கன்நகர் பகுதி பயனாளிகள் கமலா குட்டை மாநகராட்சி சமுதாயநலக்கூடத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம்.

அதேபோல 11-வது வார்டு- தேவேந்திரன் வீதி, 10-வது வார்டு காந்திநகர், மசக்காளிபாளையம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கான பயனாளிகள் தேர்வு முகாம் வரதராஜபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெறும்.÷7-வது வார்டு- கள்ளிமடை நத்தம், 6-வது வார்டு காமராஜ்நகர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கான பயனாளிகள் தேர்வு முகாம், கள்ளிமடை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெறும். பயனாளிகளின் பெயரில் பட்டா இருப்பது அவசியம். அதேபோல அந்த இடத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் குடியிருந்ததற்கான இருப்பிடச்சான்று பெற வேண்டும். குறைந்தபட்சம் 268 ச.அடி பரப்பு இருக்க வேண்டும். இப்போது வசிக்கும் வீடு குடிசை அல்லது ஓட்டுவீடாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.