Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வட்டி சலுகையில் வீட்டு வசதி திட்டம் : ஏழை மக்களுக்கு மத்திய அரசு தாராளம்

Print PDF

தினகரன்        27.05.2010

வட்டி சலுகையில் வீட்டு வசதி திட்டம் : ஏழை மக்களுக்கு மத்திய அரசு தாராளம்

திருப்பூர் : நகர்ப்புற ஏழை மக்களுக்காக, வட்டி சலுகையில் வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவியுடன், முதல்கட்டமாக, நகராட்சி பகுதிகளில் மட்டும் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மத்திய அரசு உதவியுடன் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், நகர்ப்புற பகுதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நகர்ப்புற ஏழை மக்களுக்காக வட்டி சலுகையில் வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு உதவுவதற்காகவே, இத்திட்டம் துவக்கப் பட்டுள்ளது.இத்திட்டத்தில், பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங் கப்படுகிறது. கடன் பெற குறைந்தது 290 சதுரடி நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். குறைந்த மாத வருவாயாக, 5,000 ரூபாய் பெறுபவர்கள் தகுதியுடையவர்கள்.

வங்கிகளில், நிலம் அல்லது வீடு கட்ட பெறும் கடனுக்கு எட்டு சதவீதம் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறும் கடன் தொகைக்கு எட்டு சதவீதத் துக்கு பதிலாக, மூன்று சதவீதம் செலுத்தினால் போதும்; ஐந்து சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப் படுகிறது.

ரூ.5,000க்கு கூடுதலாக வருவாய் பெறுபவர்களுக்காக எல்..ஜி., என்ற திட்டம் துவங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, மாத வருமானம் குறைந்தது ரூ,5,000; அதிகபட்சமாக 10 ஆயிரம் இருக்க வேண்டும். இவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும். இத்தொகையில், ஒரு லட்சத்துக்கு மட்டுமே மூன்று சதவீத வட்டி, மீதியுள்ள 60 ஆயிரத்துக்கு வங்கி வட்டியே கட்ட வேண்டும்.

இத்தகைய கடன் பெற விரும்புபவர்களிடம், 412 சதுரடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் கடன் பெற விரும்புவோர், கடன் பெற உள்ள நிலத்துக்குரிய பட்டா நகல், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, நிர்ணயிக்கப்பட்ட வருமானத்திற்கான சான்று (வருவாய்த்துறையினரிடம்) பெறப்பட்ட சான்றுடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாளர், வீட்டு வசதி வாரிய அலுவலர்களை அணுகலாம். மேலும், இதுகுறித்த விபரங்களுக்கு, நகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் ஆலோசனை பெறலாம்.