Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிச்சைக்காரர்களை ஒழிக்க சென்னையில் நடவடிக்கை: என்ன செய்யப்போகிறது திருப்பூர் மாநகராட்சி?

Print PDF

தினமலர் 02.06.2010

பிச்சைக்காரர்களை ஒழிக்க சென்னையில் நடவடிக்கை: என்ன செய்யப்போகிறது திருப்பூர் மாநகராட்சி?

திருப்பூர் : சென்னையை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற, சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், சென்னை மாநகராட்சியை இவ்விஷயத்தில் பின்பற்றுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை நகரத்தை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதான ரோடுகளில் சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் பொது சுவர்களில், தமிழர்களின் கலாச்சாரம், புராதானம், பண்பாடுகளை விளக்கும் சித்திரங்கள் தீட்டப் பட்டுள்ளன. மரம் வளர்ப்பு, பூங்காக்கள் மேம்பாடு, மின்சார சேமிப்பு என பல துறைகளிலும் சென்னை மாநகராட்சி முன்னுதாரண நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர, வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளும் தமிழில் இருக்க வேண்மென்ற உத்தரவையும் பிறப்பித்த, செயல்படுத்தி வருகிறது.சமீபத்தில், சென்னையில் பிச்சைக்காரர்களை ஒழிக்க அம்மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, மேயர் சுப்ரமணியன், தனியார் தொண்டு நிறுவனங்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதனடிப்படையில், பிச்சைக்காரர்களை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள தொண்டு நிறுவனங்கள் சம்மதித்துள்ளன. இதனால், விரைவில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக சென்னை மாற உள்ளது.

சென்னையை பின்பற்ற, மதுரை மாநகராட்சி நிர்வாகமும் ஆலோசித்து வருகிறது. திருப்பூரில் உள்ள பிச்சைக்காரர்களை ஒழிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட், கோவில்கள் முன் அதிகளவு பிச்சைக்காரர்கள் உள்ளனர். குறிப்பாக, பஸ் ஸ்டாண்டில் குழந்தைகளை வைத்து சாட்டை, மேளம் சகிதம் பிச்சை எடுப்பவர்கள் அதிகளவில் உள்ளனர். திருப்பூருக்கு வரும் வெளிநாட்டவர்கள் அவர்களைப் பார்த்து முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு பிழைப்பு தேடி வருபவர்கள் ஏராளம்.

லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை அளிக்கும் இடமாக திருப்பூர் விளங்குகிறது. திருப்பூரின் தொழில் வளமே, சாதாரண ஊருக்கு மாநகராட்சி அந்தஸ்தும், மாவட்ட அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது. ஆனால், வேலை செய்ய வாய்ப்பு இருந்தும் சிலர் பிச்சை எடுக்கின்றனர். சிலர் ஊனம் காரணமாக பிச்சை எடுக்கின்றனர். இவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து, பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற வேண்டியது மாநகராட்சி கடமை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். திருப்பூரில் உள்ள தன்னார்வ அமைப்புகள், சேவை நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை அழைத்துப்பேசி, பிச்சைக் காரர்களை அந்நிறுவனங்களின் பொறுப் பில் எடுத்துக் கொள்ள தேவையான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.திருப்பூருக்கான மாநகராட்சி அந்தஸ் தை அரசு அளித்து விட்டது. ஆனால், அதைக்காப்பாற்றிக் கொள்வதில் மாநகராட்சி மேயரே அக்கறை காட்ட வேண்டும