Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடு கட்ட மானியத்துடன் கடன் 1100 பேருக்கு வழங்க இலக்கு

Print PDF

தினகரன் 02.06.2010

வீடு கட்ட மானியத்துடன் கடன் 1100 பேருக்கு வழங்க இலக்கு

ராமநாதபுரம், ஜூன் 2: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1100 நகர்ப்புற மக்கள் சொந்தமாக வீடு கட்ட மானியத்துடன் கடன் வழங்கப்பட உள்ளது.

ராமநாதபுரத்தில் வங்கியாளர்கள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி தலைமை மண்டல மேலாளர் திருநாவுக்கரசு, நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் கண்ணபிரான், முன்னோடி வங்கி மேலாளர் சடகோபால் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள நகர்புறம் மற்றும் பேரூராட்சிகளில் சொந்த வீட்டு மனைப்பட்டா உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வீடுகட்ட ரூ.1 லட்சம் கடனாகவும், மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ.1.60 லட்சம் கடனாகவும் வழங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இருபிரிவினருக்கு 5 சதவீதம் வட்டித்தொகை, ரூ.1 லட்சத்திற்கு மட்டும் வங்கிகளிடம் வழங்கப்படும்.

மாவட்டத்தில் 1100 பயனாளிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளிலிருந்து 203 பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முன்னோடி வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 5 சதவீத மானிய வட்டித்தொகையை வங்கிகளுக்கு உடனே வழங்கப்படுவதால், மாவட்டத்திலுள்ள வங்கிகள் இத்திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார்.

ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மூலம், நகராட்சி பகுதியை சேர்ந்த 9பேருக்கு தலா ரூ.20ஆயிரம் வீதம் காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.