Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்புற ஏழைகள் வீடு கட்ட மானிய வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன்

Print PDF

தினமணி 03.06.2010

நகர்புற ஏழைகள் வீடு கட்ட மானிய வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன்

காஞ்சிபுரம், ஜூன் 2: நகர்புற ஏழைகள் வீடு கட்டுவதற்கு 5 சதவீத மானிய வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்தார்.

÷காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மானிய வட்டியில் நகர்புற ஏழைகள் வீடு கட்ட கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசியது:

÷நகர்புற ஏழைகள் வீடு கட்ட மானிய வட்டியில் கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை 5 சதவீத மானிய வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதல் கடன் தொகை வேண்டுமென்றால் மானிய வட்டி இல்லாமல் எஞ்சிய தொகை வழங்கப்படுகிறது.

÷இத் திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை கடன் பெறுவோர் ரூ.30 ஆயிரம் வரை மானியம் பெற வாய்ப்புகள் உள்ளன. இத் திட்டத்தில் கடன் பெறுவோர் அவர் பெயரிலோ, மனைவி, குழந்தைகள் பெயரிலோ வீடு இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா உள்ளவர்கள் மட்டுமே இத் திட்டத்தில் கடன் பெற முடியும்.

÷குறைந்த வருவாய் பிரிவினர் (ரூ.5001 முதல் ரூ.10 ஆயிரம் வரை) 40 சதுரமீட்டர் வரை வீடு கட்டுவதற்கு 1.6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளில் செலுத்த வேண்டும். கூடுதல் கடன் தொகை வேண்டுவோர் வங்கி விதிகளின்படி கடன் பெறலாம். அந்தத் தொகைக்கு வட்டி மானியம் கிடையாது.

÷தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மானிய வட்டி பெறும் பயனாளிகளுக்கு ஒரு பாலமாக இருந்து விண்ணப்பங்களை பெற்று வங்கிகளுக்கு அனுப்பி கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் இத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

÷தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம், வேலூர் வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

÷இக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலை வகித்தார். நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் சுதாகர், இந்தியன் வங்கியின் உதவி பொது மேலாளர் வாசுதேவன், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் வி.பி.தண்டபாணி, வேலூர் தமிழ்நாடு வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் ஜெ.சாரங்கபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.

÷இக் கூட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வங்கியாளர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.