Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.30,000 மானியத்துடன் ஏழைகள் வீடு கட்ட கடன் வீட்டு வசதி இயக்குநர் தகவல்

Print PDF

தினகரன்    04.06.2010

ரூ.30,000 மானியத்துடன் ஏழைகள் வீடு கட்ட கடன் வீட்டு வசதி இயக்குநர் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 4: நகர்புற ஏழைகள் வீடு கட்ட மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சிவராசு முன்னிலை வகித்தார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுதாகர், இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் வாசுதேவன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தண்டபாணி, வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் சாரங்கபாணி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசுகையில், ‘நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு ரூ.30,000 வரை மானியம் கிடைக்கும். வீட்டு மனை பட்டா உள்ளவர்கள் மட்டுமே கடன்பெற முடியும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மாத வருமானம் ரூ.5,000 வரை இருக்க வேண்டும். கடனை 15 ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதியில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம்’. இவ்வாறு, தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசினார்.