Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தில் 1,200 பேருக்கு கடன்

Print PDF

தினகரன் 07.06.2010

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தில் 1,200 பேருக்கு கடன்

சிவகங்கை, ஜூன் 7: நகர்ப்புற ஏழை மக்களுக் கான வீடு கட்டும் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 1,200 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் மகேசன் காசிராஜன் கூறியதாவது:

நகர்ப்புற ஏழை மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள், குறைந்த வருவாய் பிரிவினருக்கு சொந்த வீட்டுமனை பட்டா இருந்தால் வீடு கட்டுவதற்கு கடன் வழங்கப்பட உள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு ரூ.ஒரு லட்சம் வரை கடனாகவும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ.1.6 லட்சம் வரை கடனாகவும் வழங்கப்படும். இதில் ரூ.ஒரு லட்சத்திற்கு மட்டும் 5 சதவீதத்திற்கான மானிய வட்டியை மத்திய அரசு செலுத்தும். மற்ற தொகைகளுக்கு வழக்கமான வட்டியை பயனாளிகள் செலுத்த வேண்டும். கடனை 15 முதல் 20 ஆண்டுகளில் மாதத்தவணையாக ரூ.750 முதல் ரூ.1200 வரை செலுத்தலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 நகராட்சிகளிலும், மானாமதுரை, திருப்புவனம், நாட்டரசன்கோட்டை, கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், கண்டனூர், கானாடுகாத்தான், திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, இளையான்குடி ஆகிய 12 பேரூராட்சிகளிலும் சுமார் 1,,200 நபர்களுக்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே விருப்பமுள்ளவர்கள் ராமநாதபுரம் கே.டி.எம். காசிம் பில்டிங்கில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறினார்.