Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த கோவில்கள் இடிப்பு தொடரும் : திருச்சி மாநகராட்சியின் நடவடிக்கை

Print PDF

தினமலர் 17.06.2010

ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த கோவில்கள் இடிப்பு தொடரும் : திருச்சி மாநகராட்சியின் நடவடிக்கை

திருச்சி: திருச்சி கே.கே.நகரில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு இந்து கோவில்கள் மாநகராட்சியால் இடிக்கப்பட்டது.

திருச்சி மாநகரின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. அந்நிதி மூலம் மாநகரில் நெருக்கடியில்லாமல் அகலமான சாலை வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு சய்துள்ளது. அதற்காக மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் உள்ள இந்து, முஸ்லீம் மதங்களின் கோவில்களை இடிக்க மாநகராட்சியால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போதெல்லாம் அம்மதத்தை சேர்ந்தோரிமிடமிருந்து எதிர்ப்பு கிளம்பவே ஆக்கிரமிப்புகள் அகற்ற முடியாமல் போனது. மாநகரை விரிவுபடுத்த தேவையான நிதி மத்திய அரசு ஒதுக்கவுள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றியாக வேண்டிய கட்டாயத்தில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

இதனால், திருச்சி மாநகரில் தற்போது மாநகராட்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதாக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மலைக்கோட்டை வாசல் அருகேவுள்ள தர்காவும், மரக்கடை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த தர்காவும் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று கே.கே.நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சுந்தர் நகரிலுள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் இடிக்கப்பட்டது.

கோவிலை இடிப்பதால் ஏதாவது பிரச்னைகள் ஏற்படாமலிருக்க சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, போலீஸ் ஏ.சி.,க்கள் ராஜசேகரன், பழனிச்சாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதே பகுதியில் கட்டப்பட்டிருந்த ஒண்டிகருப்பண்ணசுவாமி கோவிலும் ஆக்கிரமிப்பில் இருந்ததால் நேற்று இடிக்கப்பட்டது.