Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நேரு நகர்ப்புற திட்டத்தின் கீழ் 63 நகரங்களில் அடிப்படை வசதி மேம்பாடு: மக்களவையில் அமைச்சர் தகவல்

Print PDF

தினமணி 29.07.2010

நேரு நகர்ப்புற திட்டத்தின் கீழ் 63 நகரங்களில் அடிப்படை வசதி மேம்பாடு: மக்களவையில் அமைச்சர் தகவல்

புது தில்லி, ஜூலை 28: ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை உள்பட நாடு முழுவதும் 63 நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாக மக்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் நாராயணசாமி மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்திருந்தார்.

மத்திய, மாநில தொல்பொருள் ஆய்வுத் துறைகளின் கட்டுப்பாட்டில் இல்லாத நினைவுச் சின்னங்களை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் பாதுகாக்கவும் மாநிலங்களின் நகர திட்டமிடல் சட்டம் அனுமதிக்கிறது. போர், நகரமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல நினைவுச் சின்னங்கள் அழிந்துவிட்டன என்று அவர் தெரிவித்திருந்தார்.