Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நலிந்த பிரிவினருக்கு வீட்டுக்கடன்

Print PDF

தினமணி 15.12.2009

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நலிந்த பிரிவினருக்கு வீட்டுக்கடன்

கடலூர், டிச. 14: கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குறைந்த வருவாய் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு வட்டி மானியத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.

÷ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செயதிக் குறிப்பு: நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வட்டி மானியத்தில் வீடு கட்ட கடன் வழங்கப்படும். மனைப்பட்டா உள்ளவர்களுக்கு வங்கிகள் மூலம் இக்கடன் வழங்கப்படும். இதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. ÷

மாத வருமானம் ரூ.3300 வரை உள்ளவர்களுக்கு மானிய வட்டியில் அதிகபட்சக் கடன் ரூ.1 லட்சம். மாத வருமானம் ரூ.3,301 முதல் ரூ.7,300 வரை உள்ளவர்களுக்கு மானிய வட்டியில் அதிகபட்சக் கடன் ரூ.1.60 லட்சம். வங்கிக்குச் செலுத்த வேண்டிய வட்டியில் மத்திய அரசு ரூ.1 லட்சத்துக்கு 5 சதம் மானியமாக கடன் வழங்கப்படும். ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட கடன்களுக்கு வங்கிகள் நிர்ணயிக்கும் வட்டி செலுத்த வேண்டும்.

÷வாய்ப்பை பயன்படுத்த விரும்புவோர் தகுந்த சான்றிதழுடன் விண்ணப்பத்தை செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், விழுப்புரம் வீட்டு வசதிப் பிரிவு கிழக்குப் பாண்டி சாலை, மகாராஜபுரம் விழுப்புரம் (தொலைபேசி எண் 04146- 249606) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Last Updated on Tuesday, 15 December 2009 06:07