Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டம்: ரூ. 32 ஆயிரம் கூடுதலாக ஒதுக்க உத்தரவு

Print PDF

தினமணி 13.04.2010

ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டம்: ரூ. 32 ஆயிரம் கூடுதலாக ஒதுக்க உத்தரவு

கோவை, ஏப். 12: ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ. 32 ஆயிரம் கூடுதலாக ஒதுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

÷கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ், 48 பயனாளிகளுக்கு தலா ரூ. 28 ஆயிரத்து 350}க்கான காசோலையை துணை மேயர் நா.கார்த்திக் வழங்கினார்.

÷நிகழ்ச்சிக்கு கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம்.சாமி தலைமை வகித்தார். மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வெ.ந.உதயக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்குப் பின் துணை மேயர் கார்த்திக் கூறியது:

÷ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம், கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

÷பட்டா வைத்திருக்கும் பயனாளிகளுக்கு அதே இடத்திலும் தனி வீடு கட்டித் தரப்படும். நீர்நிலை புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு அம்மன்குளம், உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்படும்.

÷இதற்காக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. வீடு கட்ட இத்தொகை போதுமானதாக இல்லை என்பதால், கூடுதலாக ரூ. 32 ஆயிரம் ஒதுக்க கடந்த மாதம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது, என்றார்.

Last Updated on Tuesday, 13 April 2010 10:04