Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

மாவட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கு சலுகை விலையில் சிமென்ட் வழங்கல்

Print PDF

தினகரன்    31.05.2010

மாவட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கு சலுகை விலையில் சிமென்ட் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 1000 சதுர அடிக்குள் வீடு கட்டுபவர்களுக்கு 200 ரூபாய் மானிய விலையில் 400 மூட்டை சிமென்ட் வழங்கப்படுகிறது.

கலெக்டர்(பொறுப்பு) வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக முதல்வர் தற்போதுள்ள சிமென்ட் விலை உயர்வை கருத் தில் கொண்டு நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் நபர் கள் வீடு கட்ட சலுகை விலையில் சிமென்ட் வழங்க தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் நபர்கள் 1000 சதுர அடிக்குள் வீடு கட்ட இருந்தால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற அங்கீகாரம் பெற்ற வரைபடத்துடன் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக தாலுகா கிடங்குகளில் பதிந்து தங்களது தேவையை குறிப்பிடலாம். இதில் ஒரு வீட் டிற்கு 200 ரூபாய் மானிய விலையில் 400 மூட்டை சிமென்ட் வரை வழங்கப்படுகிறது. சிறு, சிறு வீட்டு மராமத்து பணிகளில் உபயோகத்திற்கு 50 மூட்டை சிமென்ட் வழங்கப்படுகிறது. இதற்கு ரேஷன் கார்டை மட்டும் காட்டினால் போதுமானதாகும்.சிமென்ட் மூட்டைகளுக்கான தொகையை" தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்' என்ற பெயருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் "டிடி'யாக எடுத்து வர வேண்டும். சிமென்ட் மூட்டைகளுக்கு "வாட்' வரி இல்லை. சிமென்ட் மூட்டைகளின் ஏற்று கூலியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகமே ஏற்கிறது. நுகர்வோர்கள் தங்களது சொந்த செலவில் சிமென்ட் மூட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். இந்த சிமென்ட் மூட்டைகளை தவறான வழியில் பயன்படுத்தினால் சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில்1000 சதுர அடிக்குள் வீடு கட்டுவோர் உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப் பட்ட வரைபடத்துடனும், மராமத்து பணிகளை மேற்கொள் வோர் ரேஷன் கார்டுடனும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் பதிந்து மானிய விலையில் சிமென்ட் மூட்டைகளைபெறலாம்.

 

மானிய வட்டியில் வீடு கட்டுவதற்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி    28.05.2010

மானிய வட்டியில் வீடு கட்டுவதற்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை, மே 27: மதுரை மாவட்டத்தில் மானிய வட்டியில் வீடுகள் கட்டுவதற்கும் மற்றும் வீடு வாஙகவும் கடன் பெறுவதற்கு ஏழை, எளியவர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் கூறியது:

நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் வசித்து வரும் பொருளாராத்தில் பின்தங்கிய பிரிவினர் மாத வருமானம் ரூ.5000 வரையிலும், நலிவுற்ற பிரிவினர் மாத வருமானம் ரூ.5001 முதல் ரூ.10,000 வரையில் இருக்க வேண்டும். நலிவுற்ற பிரிவினருக்கு ரூ.1 லட்சமும், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையிலும் கடனாக வழங்கப்படும். இந்தக் கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.

கடன் தொகை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறும் கடன்களுக்கு வட்டியில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதல் கடன் தொகை தேவைப்படுகிறவர்களுக்கு கூடுதல் தொகைகளுக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்க வேண்டும். சொந்த வீடுகள் இல்லாதவர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

சொந்தமாக நிலம் வைத்திருப்போர் அதற்கான பட்டா உரிமை பெற்று இருக்க வேண்டும். இலவச வீட்டுமனை பெற்றவர்களும் இந்தத் திட்டத்தில் மூலம் பயன் அடையலாம். இது தொடர்பாக எல்லீஸ் நகரில் உள்ள மதுரை வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம்.

 

வீடு கட்ட வாங்கும் கடனுக்கு வட்டி மானியம் தென் மாவட்டங்களில் 9,232 பேர் விண்ணப்பம்

Print PDF

தினமணி    28.05.2010

வீடு கட்ட வாங்கும் கடனுக்கு வட்டி மானியம் தென் மாவட்டங்களில் 9,232 பேர் விண்ணப்பம்

திருநெல்வேலி, மே 27: தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழை மக்கள் வீடு கட்ட வங்கிகளில் வாங்கும் கடனுக்கு வட்டி மானியம் அளிக்கும் திட்டத்தில் பயன்பெற தென் மாவட்டங்களில் 9,232 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்தார்.

மத்திய அரசானது, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களில் ஆண்டு வருமானம் ரூ.36 ஆயிரத்திற்கு மேல் உள்ள, சொந்த நிலம் வைத்திருப்போருக்கு 300 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு ரூ.1.60 லட்சம் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடனுதவி வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடன் பெறுவோருக்கு ரூ.1 லட்சத்திற்கு வட்டி மானியமாக 5 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. எஞ்சியுள்ள கடனுக்கு வழக்கமான கடன் வட்டி விகிதம் பொருந்தும்.

தமிழ்நாட்டில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த அரசு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது. இதற்கான மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி வங்கி மேலாளர்கள் மற்றும் அனைத்து வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டஇக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியதாவது:

மத்திய அரசின் வட்டி மானிய திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் 2,781 மனுக்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5,274 மனுக்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 203 மனுக்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 974 மனுக்களும் என மொத்தம் 9,232 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் அர. சங்கர், தேசிய வீட்டுவசதி வங்கி தொடர்பு மேலாளர் கிறிஸ்டோபர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன், வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர்கள் நடேசன், மனோகரன், திருநெல்வேலி மாவட்ட முன்னோடி வங்கி

மேலாளர் ஜான்பெலிக்ஸ் பெர்ணான்டோ, ஊராட்சிகள் உதவி இயக்குநர் (பயிற்சி) கோமகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

 


Page 22 of 34