Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

வட்டி சலுகையில் வீட்டு வசதி திட்டம் : ஏழை மக்களுக்கு மத்திய அரசு தாராளம்

Print PDF

தினகரன்        27.05.2010

வட்டி சலுகையில் வீட்டு வசதி திட்டம் : ஏழை மக்களுக்கு மத்திய அரசு தாராளம்

திருப்பூர் : நகர்ப்புற ஏழை மக்களுக்காக, வட்டி சலுகையில் வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவியுடன், முதல்கட்டமாக, நகராட்சி பகுதிகளில் மட்டும் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மத்திய அரசு உதவியுடன் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், நகர்ப்புற பகுதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நகர்ப்புற ஏழை மக்களுக்காக வட்டி சலுகையில் வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு உதவுவதற்காகவே, இத்திட்டம் துவக்கப் பட்டுள்ளது.இத்திட்டத்தில், பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங் கப்படுகிறது. கடன் பெற குறைந்தது 290 சதுரடி நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். குறைந்த மாத வருவாயாக, 5,000 ரூபாய் பெறுபவர்கள் தகுதியுடையவர்கள்.

வங்கிகளில், நிலம் அல்லது வீடு கட்ட பெறும் கடனுக்கு எட்டு சதவீதம் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறும் கடன் தொகைக்கு எட்டு சதவீதத் துக்கு பதிலாக, மூன்று சதவீதம் செலுத்தினால் போதும்; ஐந்து சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப் படுகிறது.

ரூ.5,000க்கு கூடுதலாக வருவாய் பெறுபவர்களுக்காக எல்..ஜி., என்ற திட்டம் துவங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, மாத வருமானம் குறைந்தது ரூ,5,000; அதிகபட்சமாக 10 ஆயிரம் இருக்க வேண்டும். இவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும். இத்தொகையில், ஒரு லட்சத்துக்கு மட்டுமே மூன்று சதவீத வட்டி, மீதியுள்ள 60 ஆயிரத்துக்கு வங்கி வட்டியே கட்ட வேண்டும்.

இத்தகைய கடன் பெற விரும்புபவர்களிடம், 412 சதுரடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் கடன் பெற விரும்புவோர், கடன் பெற உள்ள நிலத்துக்குரிய பட்டா நகல், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, நிர்ணயிக்கப்பட்ட வருமானத்திற்கான சான்று (வருவாய்த்துறையினரிடம்) பெறப்பட்ட சான்றுடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாளர், வீட்டு வசதி வாரிய அலுவலர்களை அணுகலாம். மேலும், இதுகுறித்த விபரங்களுக்கு, நகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் ஆலோசனை பெறலாம்.

 

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம்

Print PDF

தினமலர்      26.05.2010

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம்

சென்னை : "சென்னை நகரில் சாலைகளில் திரிந்த, மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டது போல், வரும் 6ம் தேதி முதல் கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை பிடித்து, மறுவாழ்வு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதியோருக்கும் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு, மறுவாழ்வு கொடுக்க தனி சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது, என்று மேயர் சுப்பிரமணியன் கூறினார்.

Last Updated on Wednesday, 26 May 2010 05:57
 

ஜூன் 6 முதல் பிச்சை எடுக்க தடை மறுவாழ்வு அளிக்க முடிவு

Print PDF

தினகரன்    25.05.2010

ஜூன் 6 முதல் பிச்சை எடுக்க தடை மறுவாழ்வு அளிக்க முடிவு

சென்னை, மே 25: நகரில் பிச்சை எடுப்பவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்கப்படுவார்கள். இந்த பணி ஜூன் 6 முதல் தொடங்கும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில் பிச்சை எடுப்பவர்களை தடுப்பது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுடன் மேயர் மா.சுப்பிரமணியின் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி மூலம் சாலைகளில் சுற்றி திரியும் மனநோயாளிகள் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தொலைபேசி அழைப்புகள் மூலம் 451 நபர்கள் இருப்பதாக கூறப்பட்டது. இவர்களில் 179 பேர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையிலும், 105 பேர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். 11 பேர் முதியோர் இல்லத்திலும், 31 பேர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும், 5 பேர் அரசு மருத்துவமனையிலும் ஒப்படைக்கப்பட்டனர்.

போக்குவரத்து சிக்னலிலும் நகரின் பல பகுதிகளி லும் பிச்சை எடுப்பவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க 18 தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

பிச்சை எடுப்பவர்கள் ஜூன் 6ம் தேதி முதல் தொண்டு நிறுவனங்கள் மற்றும் போலீசார் உதவியுடன் மீட்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்குள் அனைவரும் மீட்கப்பட்டு சென்னையில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, துணை ஆணையர் ஜோதி நிர்மலா உடனிருந்தனர்.

 


Page 23 of 34