Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

தஞ்சை மாவட்டத்தில் 24 ஆயிரம் பயனாளிக்கு இலவச பட்டா

Print PDF

தினமலர் 11.03.2010

தஞ்சை மாவட்டத்தில் 24 ஆயிரம் பயனாளிக்கு இலவச பட்டா

கும்பகோணம்: 24 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டு உள்ளது என கலெக்டர் (பொ) கருணாகரன் கூறினார்.தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு இனங்களின் கீழ் 24 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா தலா ஒரு ஏர்ஸ் (இரண்டரை சென்ட்) வீதம் வழங்கப் பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்பட்டோர் நலத் துறை மூலமும் இப்பட்டாக்கள் வழங் கப்பட்டு உள்ளது. அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் நிலங்களை நத்தமாக வகை மாற்றம் செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார். ஆர்.டி.., செங்குட்டுவன், தாசில்தார் போஸ் ஆகியோர் உடனிருந்தனர

Last Updated on Thursday, 11 March 2010 06:40
 

நகர்புற ஏழை மக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன் : கலெக்டர் சுகந்தி தகவல்

Print PDF

தினமலர் 22.02.2010

நகர்புற ஏழை மக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன் : கலெக்டர் சுகந்தி தகவல்

புதுக்கோட்டை:கலெக்டர் சுகந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு@ நகர்புற ஏழை மக்களுக்கு மானிய வட்டியில் வீடு கட்ட கடன் உதவி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் வசிக்கும் ஏழை மக்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இத்திட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மாத வருமானம் ரூபாய் 3ஆயிரத்து300 வரை பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், மாத வருமானம் 3ஆயிரத்து301 ரூபாய் முதல் 7ஆயிரத்து300 ரூபாய் வரை குறைந்த வருமான பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூபாய் ஒரு லட்சமும், குறைந்த வருமான பிரிவினருக்கு ரூபாய் 1.60லட்ச ரூபாயும் கடன் வழங்கப்படும். கடன் தொகை 15 முதல் 20 ஆண்டு கால இடைவெளியில் திரும்ப செலுத்த வேண்டும். கடன் தொகை தேசிய வங்கிகளில் மூலம் பெற்று தரப்படும். கடன்தொகைக்கு வட்டி விகிதத்தில் 5 சதவீதம் மானியம் வழங்கப்படும். கூடுதலாக கடன் தொகை தேவைப்படுபவர்களுக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவு இருக்க வேண்டும். நடுத்தர வருமான பிரிவினர்களுக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் 40 சதுர மீட்டர் பரப்பளவு இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்கள் பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ சொந்தமாக வீடு இல்லாதவர்கள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் அதற்குரிய பட்டா உரிமையை பெற்று இருக்க வேண்டும். அரசின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா பெற்றுள்ளவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு திருச்சி வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Monday, 22 February 2010 06:28
 

நகர்புற ஏழை மக்களுக்காக வட்டி மானியத்தில் வீடு கட்ட கடனுதவி

Print PDF

தினமலர் 17.02.2010

நகர்புற ஏழை மக்களுக்காக வட்டி மானியத்தில் வீடு கட்ட கடனுதவி

நாகை : நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் நகர்புற ஏழை மக்களுக்காக வட்டி மானியத்தில் புதியவீடு கட்டுவதற்கும், கட்டிய வீட்டை வாங்குவதற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் (பொ) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் நகர்புற ஏழை மக்களுக்காக கடனுதவி வட்டி மானியத்திட்டத்தில் ஏற்கனவே மனைப்பட்டா உள்ளவர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு அல்லது கட்டிய வீட்டை வாங்குவதற்கு தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் ஹட்கோ மூலம் 1 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் 269 சதுரடி வீடு கட்டுவதற்கு 1 லட்சம் ரூபாய், 431 சதுரடி வீடு கட்ட 1. 60 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும். ஆனால் 1 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கான வட்டியை அரசு மானியமாக வழங்கும். அதிகப்படியான வட்டி தொகைக்கு அரசு மானியம் கிடையாது.

இந்த கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். இத்திட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் வீட்டு வசதிக்கடன் பெற மாத வருமானம் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்காக 3 ஆயிரத்து 300 ரூபாய் வரையும், குறைந்த வருமான வருவாய் உள்ளவர்கள் 3 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 300 ரூபாய் வரையும் இருக்கவேண்டும்.தகுதியான பயனாளிகள் தங்களது வீட்டு மனைப்பட்டா நகல், குடும்ப அட்டைநகல், தகுதியான சான்றிதழ்களுடன் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் வீட்டு வசதிப்பிரிவு, புதிய வீட்டு வசதி வாரிய காலனி. தஞ்சாவூர். மற்றும் உதவி பொறியாளர் தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு காலனி, காடம்பாடி, நாகை என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் மயிலாடுதுறை, வேதாரண்யம், நாகை, சீர்காழி ஆகிய நகராட்சி பகுதிகள், நாகை மாவட்டத்திலுள்ள பேரூராட்சி பகுதிகளில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனை உள்ளவர்களும், சொந்த வீட்டு மனைப்பட்டா உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.5 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற பயனாளிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:30
 


Page 28 of 34