Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலைய பகுதியில் ரூ.1000 கோடி நிலம் மீட்பு

Print PDF

தினகரன்     18.05.2010

கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலைய பகுதியில் ரூ.1000 கோடி நிலம் மீட்பு

சென்னை, மே 19: "கீழ்ப்பாக்கம் குடிநீர் வழங்கும் நீர் நிலைய பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரூ.1,000 கோடி மதிப்புள்ள 21 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது" என மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருவல்லிக்கேணி, வல்லப அக்ரஹாரம் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

சென்னையில் பருவ மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் மழைநீர் தேக்கத்தை தடுக்க மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை இணைந்து மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கவுள்ளது. இதற்காக சென்னையை நில அளவை செய்து, 4 நீர்த்தேக்க பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1,447.91 கோடி செலவில் இந்த பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

வேளச்சேரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் 32.60 கி.மீ. நீளத்திற்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.47.52 கோடி செலவிடப்படுகிறது. கொளத்தூர் நீர்பிடிப்பு பகுதியிலும், வடக்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதியிலும் 33.06 கி.மீ. நீளத்திற்கு ரூ.46.03 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதியான திருவல்லிக்கேணியில் பிரதான கால்வாய்கள், துணைக் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்படுகிறது. இது தவிர மத்திய பக்கிங்காம் கால்வாயை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, கான்கிரீட் தரை மற்றும் வேலி அமைக்கும் பணி பொதுப்பணித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளுக்காக ரூ.115.74 கோடி செலவிடப்படுகிறது.

கீழ்ப்பாக்கம் நீர் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க ரூ.51 கோடி செலவில் மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டிகள் கட்டப்படுகிறது. இந்த நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மீது அதிக அளவில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதன் மூலம் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சுமார் 21 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இது சென்னை மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சாதனையாகும். இவ்வாறு மேயர் பேசினார். மேயர் தகவல் .