Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு அகற்றம் 3 நாட்கள் தொடரும்:கலெக்டர் அறிவிப்பு

Print PDF

தினகரன்    27.05.2010

ஆக்கிரமிப்பு அகற்றம் 3 நாட்கள் தொடரும்:கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சையில் ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டது. தஞ்சை நகரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ரோடுகளில் இருந்து ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டன. கடந்த மூன்று நாட்களுக்கு முன் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் தஞ்சை நகரப்பகுதியில் உள்ள நகராட்சி ரோடுகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் உள்ள ஆக்ரமிப்புக்களை கடைக்காரர்கள் மற்றும் வீடு கட்டி உள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும், என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

மேலும், மே 26ம் தேதிக்குள் அவ்வாறு அகற்றாமல் போனால், நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்ரமிப்புக்களை அகற்றுவதற்கான கட்டணம் தொடர்புடைய நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும், என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி தஞ்சை நகரில் பல இடங்களில் ஆக்ரமித்து வைத்திருந்த ஆக்ரமிப்புக்களை கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றினர். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ஜெயராமன், சாலைகள் ஆய்வாளர் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்ரமிப்புக்கள் அகற்றப்பட்டது. நேற்று காலை முதல் தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து ரயிலடி செல்லும் ரோடு, திருச்சி ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் வரை செல்லும் ரோடுகளில் மூன்று நாட்களுக்கு ஆக்ரமிப்புக்கள் அகற்றப்படுகிறது.


Last Updated on Thursday, 27 May 2010 06:01