Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேனர்களை அகற்றுவதில் நகராட்சி சுறுசுறுப்பு

Print PDF

தினகரன்      27.05.2010

பேனர்களை அகற்றுவதில் நகராட்சி சுறுசுறுப்பு

பொள்ளாச்சி, மே 27: பொள் ளாச்சி நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள விளம்பர பேனர்களை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் அதிரடி யாக களம் இறங்கியுள்ளது.

பொள்ளாச்சி நகரில் கோவை ரோடு, நியூ ஸ்கீம் ரோடு, தேர்நிலை, சத்திரம் வீதி, ராஜாமில் ரோடு, தாலுக்கா அலுவலக ரோடு, காந்தி சிலை சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட் முன்பு, பாலக்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகள் வாகன போக்குவரத்து நிறைந்தவையாகும். இதில் பெரும்பாலான இடங்களிலும் வர்த்தக நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் விளம்பர பேனர் களை வைத்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து ஸதம்பித்து பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற விளம்பர பேனர்களால் பல இடங்களில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நகராட்சி நிர்வாகத்தின் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் விளம்பர பேனர் களை அகற்றும் பணியில் அதிரடியாக களம் இறங்கினர். நகராட்சி அலுவலகம் எதிரே, பஸ் ஸ்டாண்ட் முன்பு, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூ றாக இருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. அதில் வர்த்தக நிறுவனங்களின் பேனர்கள் மட்டும் அகற்றப்பட்டு, அரசியல் கட்சியினரின் பேனர்கள் அகற்றப்படவில்லை.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, வர்த்தக நோக்கில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை மட்டும்தான் நகராட்சி நிர்வாகம் அகற்ற முடியும். அரசியல் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை போலீசார்தான் அகற்ற வேண்டும். அப்பணிக்கு தேவையான ஊழியர்களை நகராட்சி நிர்வாகம் கொடுத்து உதவும், என்ற னர்.