Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவங்கும்

Print PDF

தினமலர் 03.06.2010

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவங்கும்

பல்லடம் : பல்லடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடின்றி அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவங்க உள்ளது.

பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகர்ப்பகுதியில் கருப் பாண்டி வீதி சந்து, மாணிக்கா புரம் ரோடு, மங்கலம் ரோடு உட்பட பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவை தவிர, என்.ஜி.ஆர்., ரோட்டில் நகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க் கெட் மற்றும் சந்தைப் பேட்டை பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. ஆக்கிரமிப்பு அதி கரிப்பு காரணமாக, போக்கு வரத்து நெரிசல், விபத்துக் கள் ஏற்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை எடுக்க ஆளும் கட்சி ஆதரவு தெரிவித்தால், எதிர்க்கட்சி எதிர்க்கும்; எதிர்க்கட்சி ஆதரவு அளித்தால் ஆளும் கட்சி பின்வாங்கும். இந் நிலை தொடர்ந்து நீடித்து வந்ததால், நகர்ப்பகுதி களில் ஆக்கிரமிக்கப்பட்டி ருந்த சில இடங்களை தவிர, பல இடங்கள் அகற்றப்பட வில்லை. இரு நாட்களுக்கு முன் நடந்த நகராட்சி கூட்டத்தில், நகர மற்றும் தினசரி மார்க் கெட், வாரச்சந்தை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, .தி.மு.., - தி.மு.., மற்றும் கம்யூ., கட்சிகள், தே.மு.தி.., - .தி. மு.., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருமித்த குர லில் ஆதரவு தெரிவித்தன. இதனால், தாசில்தார் குலோத்துங்கன், டி.எஸ். பி., ராமலிங்கம் தலைமை யில் நகராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர் கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் கூட்டி, ஆக்கிரமிப்பை எப்போது அகற்றுவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.