Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றல்

Print PDF

தினமணி 21.06.2010

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றல்

முதுகுளத்தூர், ஜூன் 20: முதுகுளத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. முதுகுளத்தூரில் கமுதி சாலை, பஸ் நிலைய சாலை, தேரிருவேலி சாலை, பரமக்குடி சாலை ஆகியவற்றில் ஓரமாக கடைகளுக்கு முன்பாக சிறிய கட்டடங்கள் கட்டப்பட்டும், கொட்டகைகள் போடப்பட்டும், மேஜைகள் போட்டும் ஆக்கிர மிக்கப்பட்டிருந்தன. இதனால் வாகனப் போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் இடையூறாக இருந்தது.

ஆக்கிரமிப்புகள் அகற்றல் குறித்து முதுகுளத்தூர் வர்த்தக சங்கத்தினருக்கு வட்டாட்சியர் எம்.செல்வராஜ், டி.எஸ்.பி. தில்லைராஜன், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பிச்சை பேரூராட்சி செயல் அலுவலர் பா. முனியாண்டி ஆகியோர் முறைப்படி தகவல்கள் தெரிவித்திருந்தனர்.

வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வர்த்தக சங்கத் நிர்வாகிகளை அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து விவரித்தனர். இதன் காரணமாக வியாபாரிகள் சிலர் தங்களது கடைகள் முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக தாங்களாகவே அகற்றிக் கொண்டனர். ஆனால், பலரும் ஆககிரமிப்புகளை சிறிதளவே அகற்றி இருந்தனர். இதனால் அதிகாரிகள் இறுதி அறிவி ப்பு கொடுதத்துவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸôர் உதவியுடன் பேரூராட்சிப் பணியாளர்கள், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பலரும் சென்று சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பள்ளிவாசல் மேனிலைப் பள்ளி முன்பாக சாலையோரம் இருந்த மரக்கன்றுகள், சிறிய மரங்கள் ஆகியவற்றை அகற்றியபோது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக த்தினர் திரண்டு வந்து, மரக்கன்றுகளை அகற்றக் கூடாது என்று தடுத்தனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Last Updated on Monday, 21 June 2010 07:33