Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விருதுநகர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் 166 ஹெக்டேர் அரசு நிலங்கள் மீட்பதில் அதிகாரிகள் சுணக்கம்

Print PDF

தினகரன் 26.07.2010

விருதுநகர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் 166 ஹெக்டேர் அரசு நிலங்கள் மீட்பதில் அதிகாரிகள் சுணக்கம்

விருதுநகர், ஜூலை 26: விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான ஆயிரத்து 648 ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் திணறி வருகின்றனர். சரியான அணுகுமுறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நிலங்கள் பறிபோய் விடும்.

விருதுநகர் மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா மற்றும் அங்கீகாரம் எளிதில் கிடைத்து விடுகின்றன. விருதுநகரில் பொது பாதைகள், கண்மாய்கள், ஊரணிகளை ஆக்கிரமித்து சொந்தமாக்கும் வகையில் சில சமூக விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு வருவாய்த்துறை, பத்திர பதிவுத்துறையில் சிலர் உதவியாக இருந்து வருகின்றனர். இதனால், அரசு புறம்போக்கு நிலங்கள் நாளுக்கு நாள் பறிபோய் வருகின் றன.

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு எண்ணிக்கை வருமாறு: ராஜபாளையம்&98, திருவில்லிபுத்து£ர்& 15, சிவகாசி& 168, விருதுநகர்& 43, அருப்புக்கோட்டை& 43 என நகராட்சிகளில் இனம் காணப்பட்ட 372 ஆக்கிரமிப்புகள் மூலம் 75.6 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றில் சாலையோர ஆக்கிரமிப்புகள் சேராது. ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தவரையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தாலும் குறிப்பிட்டு செல்லும் அளவில் சில ஆக்கிரமிப்புகள் மட்டும் இனம் காணப்பட்டுள்ளது: சிவகாசி&14, ராஜபாளையம்&3, விருதுநகர்&4, சாத்து£ர்&12, திருவில்லிபுத்து£ர்&9, வெம்பக்கோட்டை&32, நரிக்குடி&72, திருச்சுழி&1, காரியாபட்டி&5, அருப்புக்கோட்டை&35 என 187 ஆக்கிரமிப்புகள் மூலம் 31.44 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் கையில் சிக்கியுள்ளன.

பேரூராட்சிகளை பொறுத்தவரையில் சேத் து£ர்& 21, வத்திரா யிருப்பு&2, மம்சாபுரம்&1, .புதுப்பட்டி&4,காரியாபட்டி&1, மல்லாங்கிணறு&4 என 33 ஆக்கிரமிப்புகள் மூலம் ஒரு ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் விவரம்:

ராஜபாளையம்&109, திருவில்லிபுத்து£ர்&577, சிவகாசி&275, சாத்து£ர்&14, விருதுநகர்&20, அருப்புக்கோட்டை&51, காரியாபட்டி&10 என ஆயிரத்து 56 ஆக்கிரமிப்புகள் மூலம் 58 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் கையில் சிக்கியுள்ளன.

மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 648 ஆக்கிரமிப்புகள் மூலம் 166.04 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை. சாலையோர ஆக்கிரமிப்புகள் சேர்த்தால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான நிலங்கள்ஆக்கிரமிக்கப்பட்டு அதிர்ச்சி தகவலும் கிடைக்கும். கண்மாய்களுக்கு நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பால் பல கண்மாய்கள் தூர்ந்து வரும் நிலையில் உள்ளன.

ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பில் கண் துடைப்புக்காக தகவல் கூறினாலும் எண்ணற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கியுள்ளன. உரியமுறையில் அதிகாரிகள் தலையிட்டு மீட்டால் மட்டுமே அரசு நிலங்கள் முழுமையாக திரும்ப பெற முடியும்.