Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறையை மீறி கட்டப்படும் கட்டடத்தால் வியாபாரிகள் அதிர்ச்சி

Print PDF

தினமலர் 27.07.2010

கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறையை மீறி கட்டப்படும் கட்டடத்தால் வியாபாரிகள் அதிர்ச்சி

கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டில் விதிமுறையை மீறி கட்டட முகப்பு இடிக்கப்பட்டு, புதிய வடிவில் கடையொன்று கட்டப்பட்டு வருகிறது. இதை, மற்ற வியாபாரி களும் கடைபிடிக்க நேரிட் டால், மார்க்கெட்டின் முகப்புத் தோற்றம் மறைந்து அலங்கோலமாக மாறும் அபாய நிலை உருவாகும்.

காய்கறி, பழம், பூக்களை மொத்த வியாபாரம் செய்வதற்காக கோயம் பேடு மார்க்கெட் திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக, கோயம்பேடு பகுதியில் 295 ஏக்கர் பரப்பளவில், மார்க் கெட்டிற்குள் கட்டப்படும் கடைகளின் முகப்புத் தோற்றமும் கூரை வடிவில், ஒரே மாதிரியாக இருக்கும் படி வரைபடம் தயார் செய்யப்பட்டது. குறிப்பாக, காய்கறி மற்றும் பழக்கடைகளின் முகப்புத் தோற்றம் கூரை போன்ற அமைப்பு டனும், பூ மார்க்கெட் தனி வடிவ மைப்புடனும் இருக்கும் படி வரைபடம் உருவாக்கப் பட்டது. அந்த வரை படத்தைக் கொண்டு, உலக வங்கியின் உதவியுடன், 2,500க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக் கடைகள் ஒரே மாதிரியான முகப்புத் தோற்றத் துடன் கட்டும் பணி தொடங் கியது.

அக்கடைகள் வியாபாரிகளுக்கு ஏற்றவாறு 150, 172, 325, 600, 1,200, 2,400 சதுர அடிகளில் கட்டப்பட்டு, வியாபாரிகளிடம் குறிப் பிட்ட முன்பணம் பெற்றுக் கொண்டு அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. பிரபலமான ஒவ்வொரு கட்டடத்திற்கும் ஒரு வடிவமைப்பு இருப்பது போல், கோயம்பேடு மார்க்கெட் என்றால், கூரை போன்ற அமைப்பு அனைவரது ஞாபகத்திற்கு வரும். இந் நிலையில், கடைகளின் முகப்புத் தோற்றத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு, வியாபாரிகள் சிலர் தங்களது வசதிக்காக கடை களின் உள் அமைப்புகளில் சிறிது மாற்றம் செய்து கொண்டனர்.

ஆனால், தற்போது பழ மார்க்கெட்டில், "டி' பிளாக் முதல் பேஸ்சில் 600 சதுர அடியில் உள்ள கடை எண் 111 மொத்தமாக இடிக்கப் பட்டு, புதிய வடிவில் கட்டுமான பணி நடக்கிறது. மார்க்கெட்டின் முகப்புத் தோற்றத்தை மாற்றி, மேற்கூரைக்கு பதிலாக, கான்கிரீட் தளம் போடும் பணி முடிந்து, மேலும் சில கட்டுமானப் பணி தொடர்கிறது.

இதனால், ஒரே மாதிரி யாக மார்க்கெட்டிற்குள் இருந்த கடைகளில் இருந்து அக்கடை வித்தியாசமாக தோற்றமளிக்கிறது. இது குறித்து மார்க்கெட்டை நிர்வகித்து வரும் எம்.எம்.சி., என்றழைக்கப் படும் அங்காடி நிர்வாக குழு(மார்க்கெட் மெயின்ட னன்ஸ் கமிட்டி) மற்றும் சென்னை பெருநகர் வளர்ச் சிக் குழும அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

இதனால், மற்ற வியாபாரிகளும் கடைகளை இடித்துவிட்டு, தங்களது இஷ்டம் போல் புதிய வடிவில் கடைகளை கட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு மார்க்கெட் கடைகளின் ஒருமித்த தோற்றம் மறைந்து, அலங் கோலமாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.