Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நந்தம்பாக்கம், ஆலந்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

Print PDF

தினகரன் 28.07.2010

நந்தம்பாக்கம், ஆலந்தூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

ஆலந்தூர், ஜூலை 28: நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரை அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை இடிக்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள 19 வீடுகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நந்தம்பாக்கம் பேரூராட்சி தலைவர் சேகர், ஆலந்தூர் தாசில்தார் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் புல்டோசர் மூலம் கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருங்களத்தூரில் மாற்று இடம் ஒதுக்கி இருப்பதாக பேரூராட்சி தலைவர் சேகர் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில், வருவாய்த்துறை மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. கிண்டி ரேஸ் கோர்சுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த பகுதியில் அங்கு வேலை செய்தவர்களுக்கு வீடுகள் கட்டி இலவசமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இப்பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணி நடக்க உள்ளதால், இந்த வீடுகளை இடிக்கும் பணி அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்தது. 45 வீடுகள் இடிக்கப்படுகின்றன.