Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆடம்ஸ் நீரூற்று மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் பேனர், தட்டி வைக்க தடை மீறுபவர்களுக்கு அபராதம்

Print PDF

தினகரன் 02.08.2010

ஆடம்ஸ் நீரூற்று மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் பேனர், தட்டி வைக்க தடை மீறுபவர்களுக்கு அபராதம்

ஊட்டி, ஆக. 2: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஆடம்ஸ் நீரூற்று மற்றும் மத்திய பஸ்நிலையம் முன் பேனர் மற் றும் தட்டி வைக்க ஊட்டி நக ராட்சி தடை விதித்துள்ளது.

சுற்றுலா நகரமான ஊட் டிக்கு நாள்தோறும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர். சுற்று லா பயணிகள் கண்டு ரசிக் கும் வகையில் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஆடம்ஸ் நீரூற்று அமைக்கப்பட்டுள் ளது. ஆடம்ஸ் நீரூற்றை ரசிக்க பயணிகள் தினமும் ஏராளமானோர் கூடுகின்றனர். மேலும் எஸ்.பி., கலெக்டர் அலுவலகம் செல்லும் சந்திப்பிலும் ஒரு நீரூற்று உள்ளது. இந்த இரு நீரூற்றுக்களுமே ஊட்டி நகரின் அழகை மேம்படுத்துகிறது.

ஊட்டி சர்வதேச சுற்று லா நகரம் என்பதால் பயணி களை கவரும் வகையில் ஊட்டி நகர் சுத்தமாக வைக்கப்படுகிறது. குறிப்பாக தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, தமிழகம் மாளிகை செல்லும் சாலை, கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை கள் எப்போதும் நகராட்சி சார்பில் சுத்தமாக வைத்து கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தப்பகுதியில், பல அடி உயரத்திற்கு டிஜிட் டல் பேனர் மற்றும் தட்டி களை வைப்பதால் சுற்றுலா பயணிகள் நீரூற்றின் அழகை கண்டு ரசிக்க முடிவதில்லை. சாலையோரம் வைக்கப்படும் பேனர்களால் சுற்றுலா பயணி கள் முகம் சுளிக்கின்றனர்.

கடந்த மாதம் நடந்த நக ராட்சி கூட்டத்தில் ஊட்டி நகரில் பேனர் மற்றும் தட்டி கள் வைக்க சில குறிப்பட்ட இடங்களை தேர்வு செய்து தர வேண்டும். அந்த இடம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக இருத்தல் கூடாது. மேலும் 5 நாட்களுக்கு மேல் பேனர் மற்றும் தட்டிகள் வைக்க கூடாது என கவுன்சிலர்கள் சிலர் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் ஆடம்ஸ் நீரூற்று, மத்திய பஸ் நிலையம் மற்றும் ராஜீவ்காந்தி சிலை அருகே பேனர் மற்றும் தட்டிகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூ றாக தட்டிகள் வைக்கப்பட் டால் ரூ.500 அபராதம் விதிக் கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஊட்டி நகராட்சி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘ஊட்டி நகரை தூய்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நகரில் பல்வேறு இடங் களில் அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர ஸ்தாபனங்கள் நகரில் 5 நாட்களுக்கு மேல் பேனர் மற்றும் தட்டிகள் வைக்க கூடாது. ஆடம்ஸ் நீரூற்று, மத்திய பஸ் நிலையம் மற்றும் ராஜீவ்காந்தி சிலை அருகே தட்டி மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி தட்டி, பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்என்றார்.

Last Updated on Tuesday, 03 August 2010 06:08