Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை வீடுகள் உள்ளிட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Print PDF

தினகரன் 04.08.2010

குடிசை வீடுகள் உள்ளிட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மும்பை, ஆக. 4: மும்பை நகரில் உள்ள குடிசை வீடுகள் உள்ளிட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கு மாறு மாநகராட்சி கமிஷன ருக்கு முதல்வர் அசோக் சவான் உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மந்த் ராலயாவில் முதல்வர் அசோக் சவான் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், மும்பையில் இருக்கும் சட்டவிரோத ஆக்கிர மிப்புகளை அகற்ற தயவு தாட்சண்யம் இன்றி மா நகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட வீட்டு வசதித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

போலீஸ், அரசியல்வாதி கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூட்டணி அமைத்து நகரில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் தோன்ற ஊக்குவித்து வரு வதாக கூறப்படுவதில் உண் மை இருப்பதாக முதல்வர் ஒப்புக் கொண்டதாகவும், குடிசைகள் உள்ளிட்ட சட்ட விரோத ஆக்கிரமிப்பு கள் உருவாவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிக ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி கமிஷனர் சுவாதீன் ஷத்திரியாவுக்கு முதல்வர் உத்தரவிட்ட தாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கூட்டத்தில் முதல்வர் அசோக் சவான் பேசுகையில், "நகரில் புதிதாக குடிசைகள் முளைப்பதை தடுக்க வேண்டியது மிக அவசியம்.

அப்படி தடுப்பதன் மூலம்தான் மும்பையில் சரியான கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியும். நகர்ப்புற பகுதிகள் அதிகரித்துக் கொண்டே போவதால், மும்பை நகர கட்ட மைப்புகளுக்கு திட்டம் வகுக்கும் போது புனே, நாசிக் போன்ற நகரங்களையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

மும்பையில் உள் கட்டமைப்புகளை மேம்படுத்து வது தொடர் பாக ஆய்வு செய்ய சிங்கப் பூரை சேர்ந்த சபர்பனா கார்பரேஷன்என்ற நிறுவனம் நியமிக்கப் பட்டிருந்தது. இந்த நிறுவனம் நேற்று நடந்த கூட்டத்தின் போது தனது ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித் தது.