Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இடையூறாக இருந்த வழிபாட்டுத்தலம் அகற்றம்

Print PDF

தினமணி 04.08.2010

இடையூறாக இருந்த வழிபாட்டுத்தலம் அகற்றம்

போடி, ஆக. 3: போடியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டு தலத்தை ஜமாத் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் நகராட்சியினர் அகற்றினர்.

போடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதில் கோயில்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவை பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகின்றன. போடி பழைய ஆஸ்பத்திரி தெருவில் பள்ளி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக பழைமையான ஆலமரம் இருந்தது. ஆலமரத்தின் அடியில் 100 ஆண்டு பழைமையான இஸ்லாமிய முகைதீன் ஆண்டவர் கோயில் அமைந்திருந்தது.

போடி பகுதியில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் புதிதாக கட்டப்பட்ட நிலையில் இந்த வழிபாட்டுத்தலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறான ஆலமரத்தை அகற்றும்போது வழிபாட்டுத்தலம் சேதமடையும் நிலை இருந்தது.

இதனையடுத்து போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் போடி பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினார். அதன்பேரில், நகராட்சி மக்களின் நன்மைக்காக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வழிபாட்டுத் தலத்தை அகற்ற ஜமாத் நிர்வாகிகள் ஒத்துழைப்பதாகத் தெரிவித்தனர்.

அதன்படி செவ்வாய்க்கிழமை முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் செயலர் ஆர்.சம்சுதீன், பொருளாளர் எஸ்.அப்துல்மஜீத், மேலப்பள்ளியைச் சேர்ந்த நிஜாமுதீன் ஆகியோர் முன்னிலையில் நகரமைப்பு ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் அதை அகற்றினர்.

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வழிபாட்டு தலத்தை அகற்ற முன்வந்து ஒத்துழைப்பு அளித்த ஜமாத்தார்களையும், நகராட்சி நிர்வாகத்தினரையும் பொதுமக்கள் பாராட்டினர். அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சென்றாயன், தியாகராஜன், சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.