Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காரைக்காலில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம் சப்&கலெக்டர் அதிரடி

Print PDF

தினகரன் 24.08.2010

காரைக்காலில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம் சப்&கலெக்டர் அதிரடி

காரைக்கால், ஆக. 24: காரைக் கால் நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் கோவில் பத்து பகுதியில் வசிக்கும் 35 குடும்பத்தினர் கடந்த மாதம் 26ம் தேதி இலவச மனைப்பட்டா கேட்டு அரசு புறம்போக்கு இடத்தில் குடிசைகள் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து மாவட்ட துணை ஆட்சியர் ஆபெல் ரொசாரியோ மற்றும் போலீசார் குடிசைகளை அகற்ற சென்றபோது, பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு இலவச மனைப்பட்டா வழங்கப்படும் இடத்தை காண்பிக்கும் வரை குடிசைகளை அகற்ற விடமாட்டோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அதிகாரிகள் குடிசைகளை அகற்றும் பணியை கைவிட்டனர்.

பின்னர் காரைக்காலுக்கு வந்த புதுவை சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி மேற் கண்ட குடிசைகளை பார்வையிட்டு விரைவில் அனைவருக்கும் இலவச மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தும் பொதுமக்கள் குடிசைகளை காலி செய்ய மறுத்துவிட்டனர்.இவர்களை தொடர்ந்து காரைக்காலை அடுத்த நெடுங்காடு வடமட்டம் அம்பேத்கர் நகர், எம்.ஜி.ஆர் தெரு, வாதிகுடியிருப்பு உள் ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 25 குடும்பத்தினர் கடந்த 17ம் தேதி திடீரென நெடுங்காடு& காசாகுடி சாலையில் குடி சைகள் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மறு நாள் (18ம் தேதி) காரைக் காலை அடுத்த நெடுங்காடு மேலகாசாகுடி வடபாதி கிராத்தைச் சேர்ந்த 15 குடும்பத்தினர் இலவச மனைப்பட்டா கேட்டு நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு புறம்போக்கு இடத்தில் திடீ ரென குடி சைகள் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாவட்ட துணை ஆட்சியர் ஆபெல்ரொசாரியோ நேற்று 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று கோவில்பத்து பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் போட்ட குடிசை களை அதிரடியாக காலி செய்தார். பின்னர் நெடுங் காடு&காசாகுடி சாலையில் உள்ள 25 குடிசைகளை அகற்ற சென்ற போது, குடிசைவாசிகள் மற்றும் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுசெயலர் வணங்கா முடி, மாநில செயலாளர் செந்தமிழ்செல்வம் தலை மையில் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் பொக்லைன் எந்திரம் முன் சாலையின் குறுக்கே படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகன் கூடுதல் போலீசாருடன் சென்று குடிசைகளை அகற்றினர்.

பின்னர் இது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் ஆபெல்ரொசாரியோ கூறுகை யில் அரசு புறம்போக்கு இடத்தில் அத்துமீறி குடிசை கள் போடுவது தவறான உதாரணம். இதனை மாவட்ட நிர்வாகம் ஒரு போதும் அனுமதிக்காது. இதனால் தான் 3 இடத்தில் அத்துமீறி போடப்பட்டிருந்த 75 குடிசைகளை அதிரடியாக அகற்றியுள்ளோம். இனி இதுபோன்று குடிசை போடும் போராட்டத்தில் யாராவது ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.