Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 4 கோடி மாநகராட்சி நிலம் மீட்பு

Print PDF

தினமலர் 26.08.2010

ரூ. 4 கோடி மாநகராட்சி நிலம் மீட்பு

கோவை: சவுரிபாளையம், ராஜிவ் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த 50 சென்ட் இடத்தை மாநகராட்சி மீட்டது. ராஜிவ் நகரில், 10 ஏக்கர் பரப்பளவில் நிலம் இருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன் "ராஜிவ்காந்தி நகர்'என லே- அவுட்டாக மாற்றினர். இதில், 1.91 ஏக்கர் பரப்பளவில் ரிசர்வ் சைட் ஒதுக்கப்பட்டது. ரிசர்வ் சைட்டை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக் காமல், நிலத்தை பங்கீடு செய்து விற்பனை செய்ய கம்பி வேலி அமைத்தனர். அதில் 50 சென்ட் இடத்தை தனியாக காம்பவுண்ட் சுவர் அமைத்து 1000 சதுர அடி பரப்பளவில் வீட்டை கட்டி வசித்து வந்தார். ஒரு பாதியில் 20 சென்ட் இடத்துக்கு கம்பி வேலி அமைத்து தேக்கு, பாக்கு, தென்னை உள்ளிட்ட மரங்களை பயிரிட்டிருந்தார். காய்கறி தோட்டங்களை பயிர் செய்திருந்தார். அங்கு மாடு கன்று கட்டி பால் வர்த்தகமும் செய்துவந்தார். இதற்காக 10 சென்ட் இடத்தில் ஓடு வேயப்பட்ட ஷெட் அமைந்து அங்கு மாடு கன்றுகளை பாதுகாத்து வந்தார். 1.91 ஏக்கர் பரப்பளவிலிருந்த பிரமாண்ட ரிசர்வ் சைட்டில் 50 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து விவசாயமும், வர்த்தகமும் செய்து வந்தார். கோவை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவினர் இந்த இடத்தை கைப்பற்ற சர்வே செய்தனர். ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்திருந்தவருக்கு எச்சரிக்கை நோட் டீஸ் அனுப்பினர். அதிகாரிகள் எச்சரித்ததால், சில தினங்களுக்கு முன் வீட்டை காலி செய்தனர். நகரமைப்புத்துறையினர் காலியாக இருந்த வீட்டை நேற்று கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் நகரமைப்பு பிரிவு சிறப்பு மீட்புக்குழுவினர் வீட்டை இடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்து நகரமைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரிசர்வ் சட்டை தனிநபரோ, அமைப்போ ஆக்கிரமிப்பு செய்வது தவறு. ஆக்கிரமிப்போர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்வதோடு, மாநகராட்சி சார்பிலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்பட்டுள்ள 50 சென்ட் இடத்தின் மதிப்பு நான்கு கோடி ரூபாய்' என்றனர்.